கடந்த ஆண்டு கதுவாவின் பாக்தாலி தொழிற்பேட்டையில் நிலம் ஒதுக்கப்பட்ட பல பெரிய தொழில்துறை நிறுவனங்களில் முத்தையா முரளிதரனின் செவ்லான் பெவரேஜஸ் நிறுவனமும் ஒன்று. இது நிலத்தில் ரூ.21,000 கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யப்பட்டன.
ஆங்கிலத்தில் படிக்க:
கதுவா மாவட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சனிக்கிழமை ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அப்போது, சில சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை கேள்வி எழுப்பினர். முத்தையா முரளிதரனின் பெயரைக் குறிப்பிடாமல், சி.பி.ஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய். தாரிகாமி, கேள்வி நேரத்தின் போது, “ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு எவ்வாறு செய்யப்பட்டது?” என்று சுட்டிக்காட்டினார்.
கதுவா மாவட்டத்தில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது குறித்து சனிக்கிழமை ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெற்றது, சில சட்டமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் முடிவை கேள்வி எழுப்பினர்.
கடந்த ஆண்டு, கதுவாவின் பாக்தாலி தொழிற்பேட்டையில் நிலம் ஒதுக்கப்பட்ட பல பெரிய தொழில்துறை நிறுவனங்களில் முத்தையா முரளிதரனின் செவ்லான் பெவரேஜஸ் நிறுவனமும் ஒன்று, இதன் மூலம் ரூ.21,000 கோடிக்கும் மேல் முதலீடுகள் செய்யப்பட்டன.
கதுவாவில் ரூ.1,600 கோடி மதிப்பிலான அலுமினிய கேன்கள் உற்பத்தி மற்றும் பானங்கள் நிரப்பும் அலகு அமைக்க செவ்லான் பெவரேஜஸ் நிறுவனத்திற்கு 206 கனல்கள் (25.75 ஏக்கர்) நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. குத்தகை ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துறையுடன் நிறைவேற்றப்பட்டது.
கேள்வி நேரத்தின் போது, முத்தையா முரளிதரனின் பெயரைக் குறிப்பிடாமல், சி.பி.ஐ (எம்) சட்டமன்ற உறுப்பினர் எம்.ஒய். தாரிகாமி, “ஜம்மு - காஷ்மீரில் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரருக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு எவ்வாறு செய்யப்பட்டுள்ளது?" என்று சுட்டிக்காட்டினார்.
ஜம்மு - காஷ்மீரில் இந்திய கிரிக்கெட் வீரர் அல்லாத ஒருவருக்கு நிலம் எவ்வாறு ஒதுக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜி.ஏ. மிர், “இது ஒரு தீவிரமான பிரச்னை, இதை ஆராய வேண்டும்” என்றார்.
சட்டமன்ற உறுப்பினர்களின் கவலைகளுக்கு பதிலளித்த வேளாண் அமைச்சர் ஜாவேத் அகமது தார், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரருக்கு யூனியன் பிரதேசத்தில் தொழில்துறை அலகு அமைப்பதற்காக "இலவசமாக" நிலம் வழங்கப்பட்டதாக அரசாங்கத்திடம் எந்த தகவலும் இல்லை என்றும், அவர் அதை ஆராய்வார் என்றும் கூறினார்.
“இது வருவாய்த் துறை தொடர்பான விஷயம். எங்களிடம் எந்த தகவலும் இல்லை. மேலும், உண்மைகளை அறிய நாங்கள் அதைப் பார்ப்போம்” என்று வேளாண் அமைச்சர் ஜாவேத் அகமது தார் கூறினார்.
முன்னதாக, சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி, பள்ளிக் கல்வி, உயர்கல்வி மற்றும் சமூக நலத் துறைகளுக்கான அமைச்சர் சகீன் மசூத் (இட்டோ) தாரிகாமியின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தபோது, பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)-ன் கீழ், நிலமற்ற குடும்பங்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்ட ஐந்து மார்லாக்கள் (1,355 சதுர அடி) நிலம் வழங்கப்படுகிறது என்று கூறியிருந்தார்.
வருவாய்த் துறையின் சரிபார்ப்புக்கு உட்பட்டு நிலம் வழங்கப்படுவதை சுட்டிக்காட்டிய அவர், அவ்வப்போது வழங்கப்படும் திட்டத்தின் தகுதி மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு நிலமற்ற பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கு நீட்டித்து அந்த குடும்பங்கள் நில ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம், 2013-ன் விதிகளின்படி நிலம் கையகப்படுத்தப்படும் மக்களுக்கு இழப்பீடு நிர்ணயிக்கப்படுகிறது என்ற அமைச்சரின் பதிலுக்கு தாரிகாமி எதிர்ப்பு தெரிவித்ததால், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள மக்களுக்கும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பை பா.ஜ.க எம்.எல்.ஏ குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த மிர், அரசு நிலத்தைப் பற்றி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக எந்தவொரு இழப்பீடும் இல்லாமல் மக்களின் "உரிமை" நிலம் கூட பறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.