congress: 2024 மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் 'இந்தியா கூட்டணி' என ஓரணியில் திரண்டுள்ளன. இந்நிலையில், இந்த கட்சிகளுக்கு இடையே தற்போது தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அதன் நெகிழ்வுத்தன்மையையும், பெரிய மனதையும் காட்ட கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அழுத்தத்திற்கு உள்ளானது.
உண்மையில், ஐக்கிய ஜனதா தளம் ஜே.டி.(யு), பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்க்கட்சிக் கூட்டணியின் "சூத்ரதார்" என்று முன்னிறுத்தி வருகிறது. இந்திய அரசியலில் அவரைப் போன்ற "அனுபவம்" கொண்ட தலைவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டி வருகிறது.
இதற்கிடையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவராக இருந்த லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நேற்று டெல்லில் நடந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக முதல்வர் நிதிஷ் குமார் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் தனது பங்கை எடுத்துரைத்த நிதிஷ் குமார், இந்திய கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளுக்கு "பெரிய பொறுப்பு" இருப்பதாகவும், அவர்களுக்கு கூட்டணி வெற்றிபெற பெரிய மனது காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மறுபுறம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே - யு.பி.டி), மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 23 இல் போட்டியிடுவதாகவும், காங்கிரஸுடனான அதன் பேச்சுவார்த்தை "பூஜ்ஜியத்தில்" தொடங்க வேண்டும் என்றும், மாநிலத்தில் அக்கட்சி இதுவரை "எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை" என்றும் கூறியது.
இங்கு கவனிக்கப்பட வேண்டியதாக, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, மாநிலத்தில் பா.ஜ.க-வை எதிர்கொள்ளப் போவது தனது கட்சிதான் என்று அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தக் கட்சிகள் இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன. இந்தியா கூட்டணி நாடு முழுவதும் பா.ஜ.கவை எதிர்கொள்ளும் அதே வேளையில், மேற்கு வங்கத்தில் தனது தலைமையிலான டி.எம்.சி தான் போரை முன்னெடுத்துச் செல்லும் என்று அவர் வியாழக்கிழமை வடக்கு 24 பர்கானாஸில் நடந்த தொழிலாளர்கள் கூட்டத்தில் கூறினார்.
இதற்கிடையில், முன்னாள் முதல்வர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகேல் மற்றும் மூத்த தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித் மற்றும் மோகன் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய காங்கிரஸின் 5 பேர் கொண்ட தேசிய கூட்டணிக் குழு, டெல்லி, பீகார் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய பல மாநில பிரிவுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசினர். தொகுதிப் பங்கீடு குறித்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக காங்கிரஸின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'கட்சி நெகிழ்வாக இருக்க தயாராக உள்ளது. மாநில கட்சிகள், தங்கள் கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். ஆனால் தேசியக் கூட்டணியில், மாநில காரணிகளை விட தேசிய காரணிகள் முன்னுரிமை பெறும். இந்திய கூட்டணி கட்சிகளுக்கு இடமளிக்க கூடுதலான தூரத்திற்கு நடக்க காங்கிரஸ் தயாராக உள்ளது' என்று கூறினார்.
மாநில தலைவர்களை சந்தித்து வரும் காங்கிரஸ் கூட்டணிக் குழு தனது அறிக்கையை கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வார இறுதியில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை கட்சி முறைப்படி தொடங்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் என்று சேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருப்பது மாநில காங்கிரஸ் தலைமையை எரிச்சலடைய செய்துள்ளது. “இது மகாராஷ்டிரா. இங்கே சிவசேனா தான் இருக்கிறது. சிவசேனா என்றால் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய கட்சி. காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. ராகுல், சோனியா, கார்கே, வேணுகோபால் என அவர்களின் தேசியத் தலைமையுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். காங்கிரஸின் முடிவெடுப்பவர்களுடனான எங்கள் உரையாடல் சுமூகமாக தொடர்கிறது.
நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது... எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது டெல்லியில் முடிவு செய்யப்படும். இங்குள்ள தேசிய அளவிலான பிரச்சினைகளைப் பற்றி பேசினால்... யார் கேட்பார்கள். நாங்கள் எப்போதும் மகாராஷ்டிராவில் 23 மக்களவை தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எனவே, எங்களது இடங்கள் அப்படியே இருக்கும் என்றும் நாங்கள் கூறியுள்ளோம். மகாராஷ்டிராவில் எந்த இடத்திலும் காங்கிரஸ் வெற்றி பெறாததால், போட்டியிடும் இடங்களைப் பற்றி பின்னர் விவாதிக்கலாம் என்று எங்கள் இரண்டாவது கூட்டத்தில் நாங்கள் முடிவு செய்தோம். எனவே காங்கிரஸுடனான பேச்சுவார்த்தையை மாநிலத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்க வேண்டும்.
ஆனால் காங்கிரஸ் மகா விகாஸ் அகாடியின் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும் காங்கிரஸ், என்.சி.பி மற்றும் சிவசேனா இணைந்து செயல்படும். 2019 மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.” என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறினார்.
இந்த கருத்துகளுக்கு பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க்கட்சியாகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளது என்பதை ராவத்துக்கு நினைவூட்டினார். “மகாராஷ்டிராவின் உள்ளூர் தலைமையைக் கலந்தாலோசிக்காமல் எந்தக் கூட்டணியும் முன்னேற முடியாது என்பதை நான் ராவத்துக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தை அகில இந்திய காங்கிரஸ் ஆதரிக்கிறது,'' என்றார்.
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்ததற்காக நிதிஷ் குமாரை புகழ்ந்த ஐக்கிய ஜனதா தளம், “பாட்னா கூட்டத்திற்குப் பிறகு எதிர்க்கட்சி ஒற்றுமை பற்றிய ஒரு பெரிய செய்தி நாடு முழுவதும் சென்றது மற்றும் கூட்டணியின் சூத்திரதாராக குமார் ஆற்றிய பங்கை மக்கள் பாராட்டியுள்ளனர். இந்திய அரசியலில் அவரைப் போல அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஒரு சிலரே இருப்பது நமக்குப் பெருமை. இந்தியக் கூட்டணிக்கு நிதிஷ் குமாரைப் போன்ற தலைவர் இருப்பதால் பாஜக முகாம் பயப்படுகிறது” என்று தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிதிஷ் குமார் தனக்கு பிரதமராகவோ அல்லது இந்திய கூட்டமைப்பின் அழைப்பாளராகவோ விருப்பமில்லை என்று தெளிவாக உச்சரித்துள்ளார் என்று குறிப்பிட்டார். இந்திய கூட்டணியை மக்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து, ஜே.டி.(யு) கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகளுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. பீகாரில் காங்கிரஸ் 10 இடங்களைக் கோருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
"இந்தக் கூட்டணி வெற்றி பெறுவதற்கு அவர்கள் ஒரு பெரிய மனதைக் காட்ட வேண்டும். அனுபவம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட வேண்டும், பெருந்தன்மை இருக்க வேண்டும்)" என்று ஐக்கிய ஜனதா தளம் கூறியது.
காங்கிரஸ் தேசிய கூட்டணிக் குழு, கடந்த தேர்தலில் கட்சி முதல் மற்றும் இரண்டாமிடம் பெற்ற இடங்களை உடைத்தல், ஜாதி அமைப்பு மற்றும் கட்சி வலுவாகவும் பலவீனமாகவும் உள்ள இடங்களை வகைப்படுத்துதல் உள்ளிட்ட மாநில கட்சிகளின் கருத்துக்களைக் கேட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“எங்களைப் பொறுத்த வரையில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எந்தக் கட்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது என்ற எளிய கணக்கீட்டின் அடிப்படையில் தொகுதிப் பங்கீடு அல்லது கூட்டணி சூத்திரம் அமைந்துள்ளது. கூட்டணி ஏற்பட்டால், முந்தைய பொதுத் தேர்தலில் அந்த தொகுதியில் நாங்கள் பெற்ற செயல்பாட்டின் அடிப்படையில் டெல்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் நான்கு அல்லது ஐந்து இடங்களில் நாங்கள் உரிமை கோருவோம். கட்சி தான் போட்டியிடும் இடங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, மற்றவற்றை கூட்டணிக்கு விட்டுவிடும். இதனால் வாக்குகளை மாற்றுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு டெல்லி தலைவர் ஒருவர் கூறினார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Congress starts seat-sharing talks within, allies JD(U), Sena say be large-hearted
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.