Advertisment

நீதிமன்றத்தின் கடைசி வார்த்தை தீர்ப்பில் அச்சிடப்படும் வரை, என்ன சொன்னாலும் அது கவனிப்பு மட்டுமே – சந்திரசூட்

ஞானவாபி மசூதி வழக்குகள் மீதான விசாரணையில், 2022 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது அவதானிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அங்கு நடந்த ஆய்வு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறவில்லை என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chandrachud ex cji

முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட்

இந்திய முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வியாழன் அன்று நீதிமன்றத்தில் நீதிபதிகள் வாய்மொழியாகப் பேசுவது, "உண்மையை வெளிக்கொணரும் கருவிகளாகும், சில சமயங்களில் நீதிபதிகள் வழக்கறிஞரிடம் முரண்பாடான நிலைப்பாட்டை கூறுவதற்கு தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்" என்றார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Last word of court printed in judgment, whatever said just an observation: Ex-CJI

“நீதிமன்றத்தில் நடக்கும் எந்தவொரு விவாதமும் ஒரு உரையாடலின் பின்னணியில் புரிந்து கொள்ளப்பட வேண்டும். உண்மையை வெளிக்கொணர வழக்கறிஞர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. சில சமயங்களில், வழக்கறிஞரிடம் முரண்பாடான நிலைப்பாட்டை கூறுவதற்கு நீதிபதிகள் தவறான கருத்துக்களை முன்வைக்கிறார்கள்... நீதிமன்றத்தில் ஒரு அவதானிப்பு அல்லது உரையாடல் நீதிமன்றத்தின் நிலையை பிரதிபலிக்கிறது என்று கூறுவது நீதிமன்றத்தின் உரையாடலின் தன்மைக்கு கேடு விளைவிக்கும்,” என்று சந்திரசூட் கூறினார்.

ஞானவாபி மசூதி வழக்குகள் மீதான விசாரணையில், 2022 ஆம் ஆண்டு மே 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் தனது அவதானிப்புகள் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், அங்கு நடந்த ஆய்வு 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறவில்லை என முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். டைம்ஸ் நெட்வொர்க் இந்தியா பொருளாதார மாநாட்டில் சந்திரசூட் இவ்வாறு உரையாற்றினார்.

Advertisment
Advertisement

எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் உரிமையை எதிர்த்து புதிய வழக்குகளை பதிவு செய்யவோ அல்லது மறு உத்தரவு வரும் வரை சர்ச்சைக்குரிய மத இடங்களை ஆய்வு செய்ய உத்தரவிடவோ நாடு முழுவதும் உள்ள சிவில் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், பயனுள்ள உத்தரவுகளை பிறக்கப்பிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுப்படுத்தியது. இதனையடுத்து சில மணிநேரங்களுக்குப் பிறகு, நீதிபதி சந்திரசூட் நீதிமன்றத்தில் தனது அவதானிப்புகளை நியாயப்படுத்தினார். 

"நீதிமன்றத்தின் கடைசி வார்த்தை தீர்ப்பில் அச்சிடப்படும் வரை, நீதிமன்றம் என்ன சொன்னாலும் அது அந்த தருணத்திற்கான கவனிப்பு மட்டுமே. இதற்கு முன்மாதிரி மதிப்பு இல்லை. எதிர்கால நடவடிக்கைகளில் இதைப் பயன்படுத்த முடியாது,” என்று சந்திரசூட் கூறினார். "நீதிபதிகள் சுதந்திரமான உரையாடலில் ஈடுபடுவதை நீங்கள் தடுத்தால், உண்மை வெளிவருவதைத் தடுக்கிறீர்கள்," என்றும் சந்திரசூட் கூறினார்.

நீதிபதி சந்திரசூட், கடந்த ஆண்டு மே மாதம் ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட வாரணாசி மாவட்ட நீதிமன்றத்திற்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த போது, “அங்கே ஒரு அஜிரி (ஜோராஸ்ட்ரியர்களின் நெருப்புக் கோயில்) இருப்பதாக வைத்துக்கொள்வோம். அதே வளாகத்தில் அஜியாரியின் மற்றொரு பிரிவில் ஒரு சிலுவை இருப்பதாக வைத்துக்கொள்வோம்... சட்டம் அதற்குப் பொருந்தும். அஜியாரின் இருப்பு சிலுவையை அஜியாரியாக்குமா? ஒரு சிலுவையின் இருப்பால் கிறிஸ்தவ வழிபாட்டு இடமாக மாறுகிறதா?,” என்று கூறினார்.

பெஞ்ச் கூறியது: “எனவே, இந்த போட்டியின் அரங்கை மறந்து விடுங்கள், இந்த கலப்பு தன்மை இந்தியாவில் தெரியாதது இல்லை. எனவே சட்டம் எதை அங்கீகரிக்கிறது? ஒரு சிலுவையின் இருப்பு கிறிஸ்தவ விசுவாசத்தின் விதிகளை ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையின் விதிகளாக மாற்றாது, அல்லது ஜோராஸ்ட்ரிய நம்பிக்கையின் விதிகளின் இருப்பு அதை கிறிஸ்தவ விசுவாசத்தின் விதிகளாக மாற்றாது.”

“ஆனால், ஒரு இடத்தின் மதத் தன்மையைக் கண்டறிவது, ஒரு செயல்முறைக் கருவியாக, பிரிவுகள் 3 மற்றும் 4 (சட்டத்தின்) விதிகளுக்குப் புறம்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இவை அனைத்தும் எங்கள் உத்தரவில் ஒரு கருத்தை நாங்கள் பாதிக்க மாட்டோம்,” என்று பெஞ்ச் குறிப்பிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Supreme Court Justice D Y Chandrachud
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment