Lata Mangeshkar never took any allowance: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஞாயிறு காலை உயிரிழந்தார். இசை மற்றும் திரைத்துறைக்கு மாபெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது இவரின் மரணம். மிகப்பெரிய பாடகியாக இருந்த லதா மங்கேஷ்கர் நாடாளுமன்ற மாநிலங்களை உறூப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய 6 ஆண்டுகளில் அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாஜக ஆதரவு அளிக்க அவர் 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி அன்று நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்க துவங்கினார். அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பணி 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி வரை நீடித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் படி, நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் அனைத்துவிதமான சலுகைகள் மற்றும் காசோலைகளை அவர் தொடவே இல்லை என்பது தெரிய வந்தது. அவருக்கு “பே அக்கவுண்ட் ஆஃபிஸ்” மூலம் அனுப்பப்பட்ட அனைத்து சலுகைகள் மற்றும் காசோலைகளை அவர் திருப்பி அனுப்பியது ஆர்.டி.ஐ தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
எவ்வாறாயினும் அந்த 6 ஆண்டுகளில் 12 நாட்கள் மட்டுமே நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார் லதா மங்கேஷ்கர். மேலும் அந்த 12 முறையும் முழுமையாக நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லதா மங்கேஷ்கர்: ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ பற்றி அதிகம் அறியப்படாத 10 உண்மைகள்
இந்த ஆறு ஆண்டுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் லதா மங்கேஷ்கர். அளவுக்கு அதிகமாக ரயில் தடம் புரளும் நிகழ்வுகள் அரங்கேறியிருப்பது உண்மையா? அது உண்மை என்றால் 2000ம் ஆண்டுக்கு பிறகு இப்படி எத்தனை ரயில்கள் தடம் புரண்டுள்ளன? இதனால் ரயில்வே துறைக்கு ஏற்பட்ட இழப்புகள் என்ன? இதனை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது தொடர்பாக அவர் கேள்வி எழுப்பினார்.
ஒரு நேர்காணலின் போது, நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவதற்கு நான் சரியான நபர் அல்ல என்பதை ஒப்புக் கொண்டார். நான் எம்.பியாக இருந்தது மகிழ்ச்சி அளித்தது. ஆனால் நான் நாடாளுமன்றத்திற்குள் செல்லவே அதிக தயக்கம் காட்டினேன். உண்மையில், என்னை ராஜ்யசபாவிற்குள் வரவழைத்தவர்களிடம் என்னை விடுவிக்குமாறு கெஞ்சினேன், அரசியல் குறித்து எனக்கு என்ன தெரியும்? என்று அவர் கூறியுள்ளார்.
தமிழில் இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தவரா லதா மங்கேஷ்கர்? நீங்கா நினைவுகள்
என்னதான் நான் பாஜகவிடம் கெஞ்சினாலும் நான் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் எல்.கே. அத்வானி மற்றும் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மீதும் நன்மதிப்பை கொண்டிருந்தேன். இன்றும் மதிக்கின்றேன். ஆனால் நான் எந்த கட்சியுடன் இணையவில்லை என்று கூறியதாக நியூஸ்18 தன்னுடைய செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சினிமா துறையில் ஏற்பட்டிருக்கும் இன்னல்கள் குறித்து ஏன் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பவில்லை லதா மங்கேஷ்கர் என்பது தொடர்பான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டிருந்தன. ”நான் ஏன் சினிமா தொடர்பாக எந்த கேள்வியையும் முன்வைக்கவில்லை என்று பலரும் என்னிடம் கேட்பதுண்டு. ஆனால் நான் வ்றும் பாடகி மட்டுமே. சினிமா துறையில் நான் கேள்வி எழுப்பும் அளவிற்கு அத்துறையில் நான் தொடர்பில் இல்லை. நான் பெரிய பேச்சாளர் இல்லை என்று கூறிய அவர், தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படும் ரேகா இந்த பிரச்சனைகள் குறித்து கேள்வி எழுப்ப சரியான நபராக இருப்பார் என்று நான் கருதுகிறேன் என்று அவர் கூறினார்.
இந்தூரில் பிறந்த லதா மங்கேஷ்கர் தன்னுடைய இளமைப் பருவத்தை கோலாப்பூரில் கழித்தார். இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் தன்னுடைய தந்தை மற்றும் நாடக கம்பெனி ஒன்றை நடத்தியவருமான தினாநாத் மங்கேஷ்கரிடம் இருந்து இசைப் பயிற்சி பெற்றார் லதா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.