வீட்டுக்குள் நுழைந்ததும் தன்னுடைய சகோதரன் மகனிடம் சீப்பு கொடு என்று கேட்டுவிட்டு, ”மீண்டும் சீப்பு கேட்கின்றேன்… எனக்கு முடி இல்லை என்பதே மறந்துவிட்டது” என்று சிரிக்கிறார் லத்திகா சுபாஷ்.
மார்ச் 14ம் தேதி வரை, லத்திகா கேரளாவின் மஹிளா காங்கிரஸின் தலைவராக பதவி வகித்தார். மறைந்த இந்திரா காந்தியை போன்று “சால்ட் அண்ட் பெப்பர்” லுக்குடன் வலம் வந்தார் லத்திகா. அன்று தான் லத்திகாவிற்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று தெரிய வந்தது. எட்டுமன்னூரில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த அவர் ஏமாற்றம் அடைந்ததால் கட்சியில் இருந்து வெளியேறிய அவர், திருவனந்தபுரத்தில் இருக்கும் கட்சி அலுவலகத்தின் முன்பு மொட்டையிட்டு கொண்டார். ராகுல் மற்றும் சோனியாவிற்கு ஆதரவாக கோஷமிட்ட அவர், வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு மாநில தலைமை தான் காரணம் என்று குற்றம் சுமத்தினார். காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் மோசமான வகையில் வாய்ப்புகள் வழங்கியிருப்பதாகவும் கூறினார். 92 இடங்களில் போட்டியிடுகிறது காங்கிரஸ். அதில் 10 இடங்களில் மட்டுமே பெண்கள் போட்டியிடுகின்றனர்.
ஆண்களை விட பெண்கள் அதிகமாக இருக்கின்ற மாநிலத்தில், ஒரு பெண் மொட்டை அடித்துக் கொள்வது மிகவும் ஆழமான எதிர்ப்புகளை பதிவு செய்யும் என்று அவர்களுக்கு தெரியும். பின்பு அவர் எட்டுமன்னூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்தார். கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் எட்டுமன்னூர் பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில் அமர்ந்திருக்கும் அவரிடம் இது குறித்து பேசிய போது, இந்த போராட்டத்தை தனிநபர் போராட்டமாக பார்க்கக் கூடாது. லத்திகா சுபாஷ் கட்சி தொண்டர் மட்டும் அல்ல, மஹிளா காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கூட அவருக்கு தான் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மாணவர் பிரிவு தலைவர் கே.எம். அபிஜித், இளைஞரணி தலைவர் ஷாஃபி பரம்பிலுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட போது ஏன் மகளிரணி தலைவருக்கு வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார் லத்திகா. அவர்கள் என்னிடம் தெரிவித்திருக்கலாமே? கேரளாவில் இருக்கும் கட்சிகளில் பெண்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு நான் ஒரு உதாரணம் என்றார் அவர்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து லத்திகாக்வுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கேரள காங்கிரஸ் (எம்), காங்கிரஸ் தலைமை வகிக்கும் ஐக்கிய ஜனநாய முன்னணியில் இருந்து விலகி இடதுசாரி முன்னணியில் இணைந்தது. பல ஆண்டுகளாக கூட்டணி அடிப்படையில் ஐக்கிய ஜனநாயக முன்னணி இந்த தொகுதியை கேரள காங்கிரஸ் (எம்) கட்சிக்கு வழங்குவது வழக்கம். காங்கிரஸ் கட்சி இந்து வாக்குகளை பெறும், கே.சி.எம். கட்சி கிறித்துவ வாக்குகளை பெறும். இந்த உத்தி தான் ஐக்கிய முன்னணியை நான்கு முறை இந்த தொகுதியில் வெற்றி பெற உதவியது.
கே.சி.(எம்) வெளியேறிய பிறகு, இரண்டு முறை மாவட்ட பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்து நாயர் லத்திகா, இந்த பகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எண்ணினார். கட்சி கணக்கெடுப்பும் அவருக்கு அங்கே வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக உறுதி செய்த நிலையில், தேசிய தலைவர்களும் அவர் போட்டியிடுவதை உறுதி செய்தனர். உம்மன் சாண்டி மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆகியோரிடமும் இங்கு போட்டியிட இருப்பது குறித்து விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் எட்டுமன்னூர் தொகுதி கேரள காங்கிரஸ் (ஜோசப்) கட்சிக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு அங்கு பெரிய வாக்கு வங்கி இல்லை என்ற போதிலும் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் ப்ரின்ஸ் லூக்கஸிற்கு அந்த தொகுதி வழங்கப்பட்டது. சண்டியின் வட்டாரங்களில் ஒருவராக பார்க்கப்பட்ட அவருக்காக ஏன் முன்னாள் முதல்வர் பேசவில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார். கடந்த வாரம், லத்திகா, எட்டுமன்னூரில் மட்டுமே போட்டியிட விரும்பினார் என்று சாண்டி கூறியிருந்தார்.
காங்கிரஸ் அவரை தொடர்பு கொண்ட முற்பட்ட போதும், லத்திகா போட்டியிடுவதில் மிகவும் உறுதியாக இருக்கிறார். ஆண்கள் (கட்சி தலைவர்கள்), பெண்கள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவி வரை மட்டுமே வர முடியும் என்று நினைக்கின்றார்கள். அதன் பின் ஒரு பெண் எம்.எல்.ஏவாக வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்கள் உறுதி செய்கின்றனர். அதனால் தான் பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார் லத்திகா.
எட்டுமன்னூரில் அனைத்து அரசியல் சார்ந்த பேச்சுவார்த்தைகளும் லத்திகாவை பற்றியதாகவே இருக்கிறது. காங்கிரஸிற்கு எதிராக களம் இறங்கினால் நிச்சயமாக சி.பி.எம். கட்சியின் வி.என். வாசவன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாட்டரி டிக்கெட் விற்று வரும் ஸ்ரீஜா என்பவர், லத்திகா மொட்டை எடுத்ததை நினைத்து வருத்தம் அடைந்தார். அவர்கள் எப்படி லத்திகாவை நடத்தியுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. அரசியல் கட்சிகள் ஆண்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது உண்மை தான். ஒரு பெண்ணாக நான் அவருக்காக நிச்சயம் வாக்களிப்பேன் என்று அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.