அரசியலமைப்பு முகப்புரையில் 'சமதர்ம', 'மதச்சார்பற்ற' வார்த்தைகளை நீக்கும் திட்டம் இல்லை - மத்திய சட்ட அமைச்சர்

மத்திய அமைச்சர் மேக்வால்: "சில விவாதங்கள் இருக்கலாம், ஆனால், இந்த வார்த்தைகளை நீக்க அரசு எந்த சட்ட நடவடிக்கையையும் தொடங்கவில்லை"; இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

மத்திய அமைச்சர் மேக்வால்: "சில விவாதங்கள் இருக்கலாம், ஆனால், இந்த வார்த்தைகளை நீக்க அரசு எந்த சட்ட நடவடிக்கையையும் தொடங்கவில்லை"; இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

author-image
WebDesk
New Update
meghwal

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து "சமதர்ம" (socialist) மற்றும் "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தைகளை நீக்குவதற்கு "சில குழுக்கள்" வாதிடுவதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ராஜ்யசபாவில் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார்.

மத்திய அமைச்சர் மேக்வால்: "சில விவாதங்கள் இருக்கலாம், ஆனால், இந்த வார்த்தைகளை நீக்க அரசு எந்த சட்ட நடவடிக்கையையும் தொடங்கவில்லை"; இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்குகளை தள்ளுபடி செய்ததையும் சுட்டிக்காட்டினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க:

அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து "சமதர்ம" (socialist) மற்றும் "மதச்சார்பற்ற" (secular) என்ற வார்த்தைகளை நீக்குவதற்கு "சில குழுக்கள்" வாதிடுவதை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ராஜ்யசபாவில் வியாழக்கிழமை ஒப்புக்கொண்டார். இருப்பினும், அவ்வாறு செய்வதற்கான தற்போதைய திட்டம் அல்லது நோக்கம் அரசுக்கு இல்லை என்று அவர் தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி எம்.பி. ராம்ஜி லால் சுமன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அமைச்சர் கூறியதாவது:  “இந்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து 'சமதர்ம' மற்றும் 'மதச்சார்பற்ற' என்ற வார்த்தைகளை நீக்குவதற்கு எந்தவொரு சட்டபூர்வமான அல்லது அரசியலமைப்புச் செயல்முறையையும் முறையாகத் தொடங்கவில்லை. சில பொது அல்லது அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் அல்லது உரையாடல்கள் இருக்கலாம், ஆனால், இந்த சொற்களில் திருத்தங்கள் குறித்து அரசு எந்த முறையான முடிவையோ அல்லது முன்மொழிவையோ அறிவிக்கவில்லை."

Advertisment
Advertisements

அவசரநிலையின் போது முகப்புரையில் சேர்க்கப்பட்ட "சமதர்ம" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகள் குறித்து ஒரு விவாதம் தேவை என்று ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசாபலே ஒரு நிகழ்வில் கூறிய ஒரு மாதத்திற்குப் பிறகு அமைச்சரின் இந்த அறிக்கை வந்துள்ளது.

முகப்புரையில் இருந்து இந்த இரண்டு வார்த்தைகளையும் நீக்குவதற்கு "சில சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள்" ஒரு "சூழ்நிலையை" உருவாக்குகிறார்களா என்று எஸ்.பி. எம்.பி. சுமன், மேக்வாலின் பதிலைக் கோரியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் அழைப்புக்கும், அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் இடையே வேறுபாட்டை வெளிப்படுத்தி, மேக்வால் கூறியதாவது: "சில சமூக அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உருவாக்கியுள்ள சூழல் குறித்து, சில குழுக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன அல்லது இந்த வார்த்தைகளை மறுபரிசீலனை செய்ய வாதிடுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் இந்த விவகாரத்தைச் சுற்றிய ஒரு பொது விவாதம் அல்லது சூழ்நிலையை உருவாக்க முடியும், ஆனால், இது அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அல்லது நடவடிக்கைகளை அவசியம் பிரதிபலிக்காது."

டாக்டர் பல்ராம் சிங் மற்றும் பிறர் Vs இந்திய ஒன்றிய அரசு வழக்கில் நவம்பர் 2024-ல் உச்ச நீதிமன்றத்தின் முடிவையும் அமைச்சர் மேற்கோள் காட்டினார். இதில் நீதிமன்றம் 42வது அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. "இந்திய சூழலில் 'சமதர்மம்' என்பது ஒரு நலன்புரி அரசைக் குறிக்கிறது மற்றும் தனியார் துறை வளர்ச்சியைத் தடுக்காது என்றும், 'மதச்சார்பின்மை' அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு ஒருங்கிணைந்தது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது" என்று மேக்வால் கூறினார்.

இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டபோது, அமைச்சர் கூறியதாவது: "அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருந்து 'சமதர்மம்' மற்றும் 'மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளை மறுபரிசீலனை செய்யவோ அல்லது நீக்கவோ தற்போது எந்த திட்டமும் அல்லது நோக்கமும் இல்லை என்பதே அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. முகப்புரையில் திருத்தங்கள் குறித்த எந்தவொரு விவாதத்திற்கும் முழுமையான பரிசீலனையும் பரந்த ஒருமித்த கருத்தும் தேவைப்படும், ஆனால் இப்போதைக்கு, இந்த விதிகளை மாற்ற அரசு எந்த முறையான செயல்முறையையும் தொடங்கவில்லை."

இது உடுக் குறியிட்ட கேள்வியாக இருந்தபோதிலும், கேள்வி நேரம் தொடங்கியபோது ஏற்பட்ட அமளி காரணமாக ஒத்திவைக்கப்பட்டதால், மேக்வால் மேலவையில் இருந்தபோதும் அது எடுத்துக்கொள்ளப்படவில்லை.

ஜூன் 26, 1975-ம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் திணிக்கப்பட்ட அவசரநிலையின் 50வது ஆண்டுவிழா குறித்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஹோசாபலே, அவசரநிலைக்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழைப்பு விடுத்ததுடன், 1976-ல் 42வது திருத்தம் மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்ட "சமதர்ம" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற வார்த்தைகளை நீக்குவது குறித்து ஒரு விவாதம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

"அவற்றை (சமதர்ம மற்றும் மதச்சார்பற்ற) பின்னர் நீக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. எனவே, அவை தொடர வேண்டுமா என்று ஒரு விவாதம் இருக்க வேண்டும். பாபாசாகேப் அம்பேத்கர் பெயரிடப்பட்ட ஒரு கட்டிடத்தில் (அம்பேத்கர் சர்வதேச மையம்) இதை நான் சொல்கிறேன், அவருடைய அரசியலமைப்பின் முகப்புரையில் இந்த வார்த்தைகள் இல்லை" என்று அவர் அந்த நிகழ்வில் கூறினார்.

Constitution Of India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: