தலைமை நீதிபதி கையில் இருந்து பதக்கம் வேண்டாம்... பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த டாப்பர்

தங்கப் பதக்கத்தை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது தங்கப்பதக்கம் வாங்குவதை விட முக்கியமானது அல்ல என்று கூறுகிறார் கர்வா.

தங்கப் பதக்கத்தை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது தங்கப்பதக்கம் வாங்குவதை விட முக்கியமானது அல்ல என்று கூறுகிறார் கர்வா.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Justice Ranjan Gogoi, Law topper Surbhi karwa skips convocation

Law topper Surbhi karwa skips convocation

Apurva Vishwanath

Law topper Surbhi karwa skips convocation : டெல்லியில் இருக்கும் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் படித்து வருபவர் சுரபி கர்வா. சட்டப்படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட அவர், தன்னுடைய வகுப்பில் முதல் இடத்தை பெற்றுள்ளார். சனிக்கிழமை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கையால் விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன. சுரபி கர்வாவை மேடைக்கு அழைக்கும் போது தான் அவர் அங்கே இல்லை என்று அனைவருக்கும் தெரிய வந்தது.

Advertisment

எப்போது ரஞ்சன் கோகாய் தான் விருதுகளை அளிக்கின்றார் என சுரபி அறிந்து கொண்டாரோ அப்போதே இந்த விழாவிற்கு வருகை புரிய கூடாது என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டார் சுரபி.  நான் இந்த கல்லூரியில் என்ன கற்றுக் கொண்டேனோ, அவை தான் இந்த விழாவினை புறக்கணிக்க வைத்தது. அவர் எந்த துறையில் தலைமை வகிக்கின்றாரோ, அதே துறை, அவர் மீதான வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி தர மறுத்துவிட்டது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டி அளித்துள்ளார் சுரபி.

இந்த நாட்டில் பணி புரியும் வழக்கறிஞர்கள், இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை காத்து நிற்க வேண்டும் என ரஞ்சன் கோகாய் அவருடைய உரையில் கூறினார். அவரின் மேற்கோளுக்கான பதிலை நான் தேடிக் கொண்டிருக்கின்றேன் என்றும் சுரபி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது ஏப்ரல் மாதம், நீதிமன்றத்தில் பணி புரியும் பெண் ஒருவர் 29 பக்க பாலியல் குற்றச்சாட்டு ஒன்றினை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பினார். அவரின் அந்த குற்றச்சாட்டினை தொடர்ந்து, இன் ஹவுஸ் விசாரணை நடத்தப்பட்டது. அதில் அப்பெண் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. லீகலாக தனக்கு ஆஜராக யாருமில்லை என்று தன்னுடைய நிலைப்பாட்டினை கூறி, அப்பெண் ரஞ்சன் கோகாய் மீது கொடுத்த புகார்கள் அனைத்தையும் திரும்பப் பெற்றார் அப்பெண்.

Advertisment
Advertisements

பட்டமளிப்பு விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

கான்வெக்கேசனுக்கும் அவர் வரவில்லை. விருதினை அவர் வேண்டாம் என்று சொல்லவில்லை அவர். ஆனால் அதனை ரஞ்சனிடம் இருந்து அவர் வாங்க விரும்பவில்லை என்பதை திட்டவட்டமாக அறிவித்தார். கர்வா தன்னுடைய மேற்படிப்பை ”கான்ஸ்டிஸ்னல் லா” முடித்துள்ளார். அவருடைய தீஸிஸ் Constitution a feminist document? - இந்த கேள்வியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தங்கப் பதக்கம் பெறுவதை நான் பெருமையாக கருதுகின்றேன். என்னுடைய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். தங்கப் பதக்கத்தை யாரிடம் இருந்து வாங்குகிறோம் என்பது தங்கப்பதக்கம் வாங்குவதை விட முக்கியமானது அல்ல என்று கூறுகிறார் கர்வா.

Justice Ranjan Gogoi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: