Advertisment

லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி அன்மோல் அமெரிக்காவில் கைது; இந்தியா அழைத்து வர தீவிர நடவடிக்கை

கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரரை இந்தியா அழைத்து வருவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி இந்தியா- அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை

author-image
WebDesk
New Update
Anmol

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரரான 25 வயதான அன்மோல் பிஷ்னோய் கடந்த வாரம் கலிபோர்னியாவில் அமெரிக்க குடிவரவுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

Advertisment

டெல்லியில் உள்ள எஃப்.பி.ஐ அலுவலக அதிகாரிகள், இந்திய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்து, அவரை நாடு கடத்துவது குறித்து விவாதித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கண்டறிந்துள்ளது. 

அன்மோலின் பயண ஆவணங்களில் ஒன்று போலியாக உள்ளது என்று அமெரிக்க குடிவரவுத் துறை கண்டறிந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

“பானு என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டை தயாரித்து 2022 மே 15 அன்று அன்மோல் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்றார். ஆனால் அவரது பயண ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட ஒரு ஆவணம் போலியானது என்பதை அமெரிக்க குடிவரவுத் துறை கண்டறிந்துள்ளது” என்று தகவல் தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 

கடந்த வியாழன் அவர் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூன்று எஃப்.பி.ஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இந்தியாவில் உள்ள பல விசாரணை முகமை அதிகாரிகளை  சந்தித்தாக கூறியது. அன்மோலின் வழக்கு நிலை குறித்து விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை மற்றும் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் அன்மோலின் தொடர்பு குறித்தும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் விவாதித்ததாக கூறப்படுகிறது.

"கூட்டத்திற்குப் பிறகு, அனைத்து மத்திய நிறுவனங்களும் தங்கள் வழக்குக் கோப்புகளை மீண்டும் திறக்கத் தொடங்கின, அன்மோலுக்கு எதிரான நேரடி / வலுவான ஆதாரங்களின் பட்டியலை உருவாக்குகின்றன" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அன்மோல் குறித்து விவரம் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தது. 

ஆங்கிலத்தில் படிக்க:   Lawrence Bishnoi’s brother Anmol held in California; Indian officials, FBI discuss possibility of his return

மே 2022-ல் சுட்டுக் கொல்லப்பட்ட பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் அன்மோல் முக்கியப் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. 

கொலையைத் தொடர்ந்து, ஜோத்பூர் சிறையில் இருந்து அன்மோல் ஜாமீனில் வெளிவந்த எட்டு மாதங்களுக்குப் பிறகு. அவர் போலி பாஸ்போர்ட்டில் இந்தியாவை விட்டு தப்பிச் சென்றுள்ளார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment