Advertisment

ஓவ்வொரு தலைவராக வெளியேறுவது கவலைக்குரியது; காங்கிரஸை சுயபரிசோதனைக்கு அழைக்கும் ஜி 23 தலைவர்கள்

"ஒவ்வொரு தலைவராக" கட்சியை விட்டு வெளியேறுவது "தீவிரமான கவலைக்குரிய விஷயம்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்

author-image
WebDesk
New Update
ஓவ்வொரு தலைவராக வெளியேறுவது கவலைக்குரியது; காங்கிரஸை சுயபரிசோதனைக்கு அழைக்கும் ஜி 23 தலைவர்கள்

Manoj C G 

Advertisment

‘Leader after leader leaving; serious concern’: Congress G-23 leaders call for introspection: காங்கிரஸில் இருந்து மூத்த தலைவர் அஸ்வனி குமார் வெளியேறியது மீண்டும் அக்கட்சியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி அமைதி காத்து வரும் நிலையில், கட்சியில் உள்ள ‘ஜி-23’ குழுவின் தலைவர்கள், அஸ்வினி குமார் வெளியேறியது, கட்சியில் எல்லாம் சரியாக இல்லை என்பதை காட்டுகிறது என்று கூறியுள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறுகையில், "ஒவ்வொரு தலைவராக" கட்சியை விட்டு வெளியேறுவது "தீவிரமான கவலைக்குரிய விஷயம்" என்றார்.

குலாம் நபி ஆசாத், ராஜ்யசபா காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா மற்றும் லோக்சபா எம்பி மணீஷ் திவாரி ஆகியோர் கட்சி தீவிரமான மற்றும் நேர்மையான சுயபரிசோதனையை செய்ய வேண்டிய நேரம் இது என்று கூறினர். அவர்கள் மூவரும் 23 மூத்த தலைவர்கள் அல்லது ஜி -23 தலைவர்கள், அதாவது ஆகஸ்ட் 2020 இல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள்.

மார்ச் 10ஆம் தேதிக்குப் பிறகு, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் சாதகமாக வரவில்லை என்றால், கட்சி வெடிப்பைச் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பெயர் வெளியிட விரும்பாத பல தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

“ஓவ்வொரு தலைவராக கட்சியை விட்டு வெளியேறுவது மிகுந்த கவலையளிக்கிறது. கட்சியிலிருந்து வெளியேறியவர்களில் நாடு முழுவதும் பல்வேறு மட்டங்களில் உள்ள ஏராளமான தலைவர்கள் மற்றும் தொண்டர்களைத் தவிர, அஷ்வனி குமார், நான்காவது அல்லது ஐந்தாவது முன்னாள் மத்திய மந்திரி என்று நான் நினைக்கிறேன்” என்று குலாம் நபி ஆசாத் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

இதையும் படியுங்கள்: Exclusive: காங்கிரஸ் முன்வைக்கும் மாற்றுக்கு ஆதரவாக தேசிய மனநிலை இல்லை – அஸ்வினி குமார் பேட்டி

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினரும், ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத், இந்த வெளியேற்றங்களுக்கான காரணத்தைக் கண்டறிய காங்கிரஸ் நிறைய சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பதை இது காட்டுகிறது என்றார். மேலும், இந்தத் தலைவர்கள் எந்த ஒரு தனிநபரின், அல்லது ஏதேனும் ஒரு கட்சியின் விருப்பப்படி நடக்கிறார்கள் என்று சொல்வது சரியல்ல. கட்சிக்குள் சில குழப்பங்கள் இருக்கிறது, அது காலங்காலமாக காங்கிரஸூக்கு உழைத்து வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களைக் கூட சங்கடப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார்.

மணீஷ் திவாரியும் விவேக் டான்காவும் அஷ்வினி குமாரின் வெளியேற்றத்தை "வருத்தமானது" மற்றும் "துரதிர்ஷ்டவசமானது" என்று கூறினர்.

ஹரியானா முன்னாள் முதல்வரும் மற்றொரு ஜி-23 தலைவருமான பூபிந்தர் சிங் ஹூடா ட்விட்டரில், “அஷ்வனி குமார் காங்கிரஸை விட்டு வெளியேறிய செய்தி வருத்தமும் துரதிர்ஷ்டமும் அளிக்கிறது. அவர் ஒரு பழைய அன்பான நண்பர் மற்றும் ஒரு சுதந்திர போராட்ட வீரரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று பதிவிட்டுள்ளார்.

மணீஷ் திவாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், “திரு அஷ்வனி குமாரும் நானும் டாக்டர் மன்மோகன் சிங்கின் அரசாங்கத்தில் ஒன்றாக வேலை செய்தோம். அவருக்கும் எனக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும், ஒரு சிறு தொண்டர் கட்சியை விட்டு வெளியேறினாலும், அது சுயபரிசோதனைக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறினார்.

“மதிப்புமிக்க சக தலைவர் அஸ்வனி குமார் காங்கிரஸில் இருந்து விலகியது வருத்தமளிக்கிறது. நான்கு தசாப்தங்களாக கட்சிக்கு சேவையாற்றிய ஒருவர் வெளியேறியது துரதிஷ்டவசமானது. கூட்டு அக்கறைக்குரிய விஷயம்” என்று ஆனந்த் ஷர்மா ட்வீட் செய்துள்ளார்.

வலுவான, ஒன்றுபட்ட காங்கிரஸ் நாட்டின் நலனுக்கு தேவையாக உள்ளது என்று வாதிட்ட குலாம் நபி ஆசாத், அதைச் செயல்படுத்த சுயபரிசோதனை தேவை என்று கூறினார்: "இது ஏன் நடக்கிறது" என்பதைக் கவனிக்க வேண்டும். கட்சியுடனான அஷ்வினி குமாரின் குடும்பத்தின் தொடர்பு சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலிருந்து உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “அப்படிப்பட்டவர்கள் போனால் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார்.

அஷ்வினி குமாரின் வெளியேற்றம் குறித்து காங்கிரஸ் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஜி 23 இல் அங்கம் வகிக்காதவர்கள் உட்பட பல தலைவர்கள், 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் சாதகமற்ற முடிவுகள் கட்சிக்குள் கடுமையான சிக்கலைத் தூண்டும் என்று கூறினர். “சில இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை வைத்துக்கொண்டு கட்சியை நடத்த முடியாது. மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்” என்று ஒரு தலைவர் கூறினார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Gulam Nabi Congress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment