மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரபல நடிகர் சௌமித்திரா சாட்டர்ஜி இன்று கொல்கத்தா மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 85. அக்டோபர் 6 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராயின் விருப்பமான நடிகர் என பலராலும் பாராட்டப்பெற்ற சௌமித்திரா சாட்டர்ஜி, பத்ம பூஷண், தாதாசாகேப் பால்கே விருது, சங்கீத நாடக அகாதமி உள்ளிட்ட மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும் வென்றெடுத்தார்.
ஜனவரி 19, 1935 இல் பிறந்த சௌமித்திரா சாட்டர்ஜி, முன்னோடி நாடக ஆளுமையுமான அஹிந்திரா சவுத்ரியிடமிருந்து நடிப்பைக் கற்றுக்கொண்டார். முதலில், சத்யஜித் ராயின் அப்பு கதாபாத்திரத்திற்காக நிராகரிக்கப்பட்ட இவர், அபுர் சன்சார் என்ற அப்பு தொடரின் மூன்றாவது படத்தில் கதாநாயகனாக நடித்தார். அப்பு தொடர்களிலேயே இது தான் சிறந்தது என அபர்ணா சென், ராபின் உட் போன்ற விமர்சகர்கள் புகழ்ந்தனர். இருவரும் இறுதியில் அபிஜன் (1962), சாருலதா (1964), காப்புருஷ் (1965), அரான்யர் டின் ராத்ரி (1970)
, அஷானி சங்கத் (1973) , சோனார் கெல்லா (1974) மற்றும் ஜொய் பாபா ஃபெலுநாத் (1978) உள்ளிட்ட 14 படங்களில் பணியாற்றினர்.
மம்தா பேனர்ஜி அஞ்சலி:
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சௌமித்திரா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்ட பெல்லி வ்யூ கிளினிக்கிற்கு வருகை தந்து நேரில் அஞ்சலி செலுத்தினார்.


பிரதமர் மோடி இரங்கல்: மோடி தனது ட்விட்டரில், "சௌமித்திரா சாட்டர்ஜியின் மறைவு சினிமா உலகிற்கும், இந்தியா மற்றும் மேற்கு வங்கத்தின் கலாச்சாரம் மிகுந்த வாழ்க்கைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும் . அவரது படைப்புகள் மூலம் அவர் வங்காள உணர்வுகள், உணர்ச்சிகள் மற்றும் நெறிமுறைகளை வெளிப்படுத்த வந்தார். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் . ஓம் சாந்தி. " என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி இரங்கல்: தாதாசாகேப் பால்கே விருது பெற்ற சௌமித்திரா சாட்டர்ஜியின் மறைவு குறித்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்கள்" என்று தெரிவித்தார்.