LIC files papers, set for biggest Indian IPO ever : எல்.ஐ.சி. பங்கு விற்பனை வரைவை, பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடன் தாக்கல் செய்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ (இனிசியல் பப்ளிக் ஆஃப்பரிங்) என்று கருதப்படுகிறது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டை வீழ்த்தி, எல்ஐசி இந்தியாவின் மதிப்புமிக்க பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாறும் வாய்ப்பும் உள்ளது.
எல்.ஐ.சி தன்னுடைய மொத்த ஈக்விட்டியில் 5% பங்குகளை அதாவது 316.25 மில்லியன் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது என்று அந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த எல்.ஐ.சியின் மொத்த ஈக்விட்டி மதிப்பானது 6.32 பில்லியன் பங்குகள் ஆகும்.
IPO முழுவதுமாக விற்பனைக்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. அதாவது பங்குகள் விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் முழுமையாக அரசாங்கத்திற்குச் சென்று அதன் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் இலக்கை அடைய உதவும். இந்த மாத தொடக்கத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில், இந்த நிதியாண்டில் பங்கு விலக்கல் (disinvestment) மதிப்பு ரூ.78,000 கோடியாக இருக்கும் என்று அரசாங்கம் நிர்ணயித்திருந்தது.
சலுகை ஆவணத்தின்படி, சலுகையில் 5 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும் பங்குகளின் ஒரு பகுதி ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும். இதேபோல், தகுதியான பாலிசிதாரர்களுக்கு 10 சதவீதத்திற்கு மிகாமல் மற்றொரு பகுதி ஒதுக்கப்படும். இந்த பயனை அனுபவிக்கும் பாலிசிதாரர்கள் வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் தேதியின்படி எல்ஐசி பாலிசிகளை வைத்திருக்கும் இந்திய குடிமக்கள் ஆவார்கள்.
ப்ராஸ்பெக்டஸ் படி, பொது விற்பனை தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, ஐபிஓவின் விலை சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையுடன் ஒப்பிடும்போது பாலிசிதாரர்கள் மற்றும் பணியாளர்கள் அதிக சலுகைகளை பெறலாம் என்றும் அது கூறியது. வெளியீட்டில் குறைந்தபட்சம் 35 சதவீதம் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஐசியின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பு (Embedded Value) ரூ.539,686 கோடி என்றும் ப்ரோஸ்பெக்டஸ் கூறியுள்ளது. உட்பொதிக்கப்பட்ட மதிப்பு என்பது ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் மதிப்பை அளவிடப் பயன்படும் அளவுகோலாகும். இது தற்போதுள்ள வணிகம் மற்றும் பங்குதாரர்களின் நிகர மதிப்பிலிருந்து வரும் அனைத்து எதிர்கால லாபங்களின் தற்போதைய மதிப்பின் கூட்டுத்தொகையாக கணிக்கப்படுகிறது. இன்சூரன்ஸ் ரெகுலேட்டரான ஐ.ஆர்.டி.ஏ.ஐ கடந்த வாரம் எல்ஐசி ஐபிஓவை அனுமதித்தது.
தனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது அவற்றின் உட்பொதிக்கப்பட்ட மதிப்பை விட இரண்டு முதல் நான்கு மடங்கு வரை வர்த்தகம் செய்கின்றன. அதே அளவுகோலைப் பயன்படுத்தினால், எல்ஐசியின் சந்தை மூலதனம் ரூ.10.8 லட்சம் கோடி முதல் ரூ.21.6 லட்சம் கோடி வரை இருக்கலாம். தற்போது, இந்தியாவில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது, இதன் சந்தை மூலதனம் ரூ 16.1 லட்சம் கோடி.
ரூ.10.8 லட்சம் கோடி மதிப்பீட்டில் 5 சதவீத விற்பனை மூலம் அரசுக்கு ரூ.54,000 கோடி வருவாய் கிடைக்கும். இது கடந்த ஆண்டு அதன் IPOவில் One 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் திரட்டிய 18,300 கோடியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம். இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமாகும். பிரீமியத்தின் அடிப்படையில் 64.1% சந்தைப் பங்கையும், புதிய வணிக பிரீமியத்தின் அடிப்படையில் 66.2% சந்தைப் பங்கையும், தனிப்பட்ட பாலிசிகளின் எண்ணிக்கை மற்றும் வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் 74.6% சந்தைப் பங்கையும் எல்.ஐ.சி. கொண்டுள்ளது.
செப்டம்பர் 30, 2021 நிலவரப்படி ரூ. 39.6 லட்சம் கோடி மதிப்பிலான நிர்வகிக்கப்பட்ட சொத்துகளுடன் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நிர்வாகமாக LIC உள்ளது. எல்.ஐ.சியின் கீழ் உள்ள சொத்துகள், இந்தீயாவில் உள்ள அனைத்து தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கீழ் இருக்கும் சொத்துகளைக் காட்டிலும் 3.3 மடங்கு அதிகம். இது மார்ச் 31,2021 நிலவரமாகும்.
கார்ப்பரேஷன் QIB (qualified institutional buyers) பகுதியின் 60 சதவிகிதம் வரை முதலீட்டாளர்களை விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கலாம். ஆங்கர் முதலீட்டாளர் பகுதியின் மூன்றில் ஒரு பங்கு உள்நாட்டு பரஸ்பர நிதிகளுக்கு ஒதுக்கப்படும். மார்ச் 2022-இல் முடிவடையும் நிதியாண்டு முடிவதற்குள் IPO முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil