காதலுக்கு வயது, சாதி, மதம், உடல் குறைபாடு என எதுவுமே தடையாக இருக்க முடியாது என்பதற்கு சாட்சியங்களாக பல காதல் ஜோடிகள் இருக்கின்றனர். மும்பையை சேர்ந்த சந்தீப் - பவுலாமி அப்படியொரு உதாரண தம்பதி. பவுலாமி மாற்றுத்திறனாளி என்றபோதிலும், எந்தவொரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து வருகின்றனர் இத்தம்பதியர்.
சந்தீப் - பவுலாமி இருவரும் கல்லூரி கால நண்பர்கள். அப்போதிலிருந்தே, சந்தீப்புக்கு பவுலாமியின் உடலின் இயலாமை ஒரு குறையாக இருந்ததில்லை.
“அவள் எப்படியோ ஒரு கையை இழந்திருக்கிறாள். ஆனால், எப்படி இழந்தாள் என கேட்க வேண்டும் என்பது அவ்வளவு முக்கியமான விஷயமாக கருதவில்லை.”, என்கிறார் சந்தீப்.
இவர்களது காதல் மெல்ல மெல்ல ஒரு அழகிய உறவாக பரிணமித்திருக்கிறது.
“நாங்கள் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட்டோம். உறங்க செல்லும்போது போனில் உரையாடாமல் செல்லக்கூடாது என்பது எங்களுடைய பழக்கமானது. ‘வீட்டுக்கு சென்றுவிட்டாயா?”, என்ற ஒற்றை வார்த்தையையாவது பேசிவிடுவோம்.”, என கூறுகிறார் சந்தீப்.
"நான் அவளை செயற்கை கை இல்லாமல் கூட பார்த்திருக்கிறேன். நான் அவளை முழுமையான மனிதராக உனர்கிறேன்.”
/tamil-ie/media/media_files/uploads/2018/01/f787c40b-caba-41d8-a57c-37039642e10a-300x225.jpg)
“இவள் எல்லாவற்ரையும் பெற தகுதியானவள் என எப்போதும் நான் நினைப்பேன் . அவற்றையெல்லாம் பெற நான் சிறியளவில் உதவி செய்கிறேன். அதனால், அவளுடைய எல்லா கஷ்டங்களையும் நான் சிறுசிறு துண்டுகளாக்கிவிடுகிறேன்”, என காதலுடன் பேசுகிறார் சந்தீப்.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/20f986ee-f5d0-4500-b0ef-2172659c2bfe-300x200.jpg)
“அவள் கைகளை இழந்திருக்கலாம். ஆனால், நான் அவளுடைய சிறகுகளை பார்க்கிறேன். அவள் பறப்பதை பார்க்க என்னால் காத்திருக்க முடியவில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2018/01/00e7a58e-83fc-425c-b8dc-2d34eac3ca97-300x138.jpg)
“நான் இதை எப்படி பார்க்கிறேன் என்றால், நாம் எல்லோருமே சிலவற்றை இழந்திருப்போம். சிலருக்கு அவை உணர்வுகளாக இருக்கலாம், சிலருக்கு அவை உடல் உறுப்புகளாக இருக்கலாம். அந்த இழந்தவற்றை நிரப்புபவர்களை நாம் கண்டறிய வேண்டும்.”
/tamil-ie/media/media_files/uploads/2018/01/fc74b615-fe7c-40e4-9fa7-94d83603db52-300x123.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/01/57d4f794-6738-4ec1-a553-ee07cae2e408-300x212.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/01/73f0d160-f952-46af-b00a-26bd2c9f2ce6-300x57.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2018/01/fi-300x81.jpg)