இந்தியாவின் தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்திய ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு தேஜாஸ் போர் விமானத்திலிருந்து ஏவுகணை செலுத்திய சோதனை வெற்றிபெற்றது.

இந்திய நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானம் தொடர்ந்து பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோதனைகள் இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வானில் இருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணையை தேஜாஸ் போர் விமானத்தில் இருந்து செலுத்தி சோதிக்கப்பட்டது.

Tejas aircraft 1

கோவா கடற்பகுதியில் நேற்று முன்தினம் நடந்த இந்தச் சோதனை வெற்றிகரமாக நடந்ததாக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சோதனை நிகழ்வுகள் அனைத்தையும் மற்ற 2 தேஜாஸ் போர் விமானத்தில் சென்று ராணுவ அதிகாரிகள் அதிநவீன கேமராவுடன் கண்காணித்தனர். இதில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தேஜாஸ் போர் விமானம் நிறைவேற்றி இருந்தது தெரியவந்தது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதற்காக டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகளை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.

Tejas aircraft 2

இந்தச் சோதனை வெற்றியடைந்ததன் மூலம் தேஜாஸ் போர் விமானத்துக்கான இறுதி ஒப்புதல் கிடைப்பது மேலும் வேகமெடுக்கும் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விமானத்தில் ஏவுகணைகள் உள்ளிட்ட போர் தளவாடங்களை இணைப்பதற்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close