lighthouse journalism : சுதந்திர தினத்தன்று அதிகமாக பேசப்படாத முக்கியமான நிகழ்வுகளை க்ரவுட் ஃபண்டிங் மூலம் முன்னிலைப்படுத்தும் நோக்கில் லைட்ஹவுஸ் ஜேர்னலிஸம் (Lighthouse Journalism) துவங்கப்பட்டுள்ளது.
பொது ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது மிகவும் குறைவாகவே செய்திகளாக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தில் லைட்ஹவுஸ் ஜேர்னலிசம் இணையம் என்ற கூட்டு நிதி தளம் (crowdfunding platform) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூகத்தில் நேர்மறை தாக்கங்களை உருவாக்கும் தனி மனிதர்கள், நிறுவனங்கள் அல்லது குழுக்கள் குறித்த செய்திகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தின் உதவியுடன் வெளிப்படுத்த இருக்கும் கூகுள் இனிசியேட்டிவ் இதுவாகும். சமூக கட்டமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் கூட்ட நிதியை அதன் இலக்குகளை அடையும் பாதைகளை இந்த திட்டம் மேம்படுத்தும்.
indianexpress.com இணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் சிந்த்வானி, லைட்ஹவுஸ் ஜேர்னலிசம், மாற்றங்களை உருவாக்கும் நபர்களை சமூகம் அடையாளம் காணும் போக்கையும், அவர்களின் வெற்றியை வெளிப்படுத்தும் விதங்களையும் மாற்றும் என்றார். தனித்துவமான க்ரவுட் ஃபண்டிங் பத்திரிக்கை மாதிரியை (unique crowd-funded model of journalism) பயன்படுத்தி இது நாள் வரையில் புறக்கணிக்கப்பட்டு வந்த பிரச்சனைகள் மற்றும் கருப்பொருட்களின் மீது புது வெளிச்சம் காட்டப்படும் என்றும் கூறினார்.
இந்த முயற்சி கூகுள் நியூஸ் இனிசியேட்டிவ் சேலஞ்சஸ் விருதுகளைப் பெற்ற indianexpress.com-ஆல் தொகுக்கப்பட உள்ளது. இது உலகெங்கிலும் செய்திகள் தொடர்பான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யும் துறைசார் நிபுணர்களுக்கு ஆன்லைன் பத்திரிகையில் புதிய சிந்தனைகளை நிரூபிக்க அதிகாரம் அளிக்கிறது.
செய்தியாளர்களுக்கு ஒரு கருப்பொருளை பயனர்கள் உருவாக்க www.lighthousejournalism.com என்ற இணையத்தில் பதிவு செய்து டோக்கன் தொகையை செலுத்த வேண்டும். அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் திட்டத்திற்கான க்ரவுட் ஃபண்டிங்கை பெற முயற்சிக்கலாம்.
எவ்வாறாயினும், ஒவ்வொரு திட்டமும், ஆசிரியர் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது, இது திட்டத்திற்காக திரட்டப்படும் நிதி வரம்பையும், ஒரு ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளருக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தையும் தீர்மானிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil