நெருங்கி வரும் மக்களவை தேர்தல்: 100 நாள் வேலை திட்டத்துக்கு 50% கூடுதல் நிதி ஒதுக்க திட்டம்

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 90,000 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 90,000 கோடி ரூபாய் ஒதுக்க உள்ளது.

author-image
WebDesk
New Update
Likely hike of 50 Percentage  in FY25 Budget outlay for MGNREGS Tamil News

பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 100 வேலை திட்டத்திற்கு மேலும் ரூ.12,000 கோடி வழங்க வாய்ப்புள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

Central Government | இந்திய நாடாளுமன்றத்திற்கு 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவதற்கான 2024 பொதுத் தேர்தல் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை என தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. 

 கூடுதல் நிதி 

Advertisment

மக்களவை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு (MGNREGS), அதாவது 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 90,000 கோடி ரூபாய் ஒதுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 2023 -2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டை விட சுமார் 50 சதவீதம் அதிகமாகும். 

ஃபிளாக்ஷிப் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை பெருமளவில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், 100 நாள் வேலைகள் திட்டத்திற்காக 2024 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில், ரூ.60,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. 

இந்தத் திட்டம் நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு உத்தரவாதமான ஊதிய வேலைவாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இது ஒரு தேவை-உந்துதல் திட்டம் என்பதால், நடப்பு நிதியாண்டில் குறைந்த ஒதுக்கீட்டை வழங்கும் அதே வேளையில், 100 நாள் வேலைக்கு தேவைப்படும் போது அதிக நிதியை வழங்குவதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. 

Advertisment
Advertisements

கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வதன் மூலம் 2025 நிதியாண்டில் கூடுதல் மானியங்களை நாடாமல், மத்திய அரசு ஆண்டு முழுவதும் அதைக் கடைப்பிடிக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார். 

நடப்பு நிதியாண்டிற்கு வழங்கப்பட்ட நிதி அக்டோபர் மாதத்திற்குள் காலியாகிவிட்டதால், டிசம்பர் தொடக்கத்தில் மானியங்களுக்கான முதல் கூடுதல் கோரிக்கையில் ரூ.16,143 கோடி கூடுதல் ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியது. பட்ஜெட்டில் நடப்பு நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 100 வேலை திட்டத்திற்கு மேலும் ரூ.12,000 கோடி வழங்க வாய்ப்புள்ளது. அதனால், மொத்த செலவினம் ரூ.88,000 கோடியாக இருக்கும்.

முயற்சி 

இதற்கிடையில், செலவுகளை குறைக்க மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. சில மதிப்பீடுகள் திட்டத்தில் ஆண்டு செலவினத்தில் சுமார் 30 சதவீதமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக மேற்கு வங்கத்திற்கு இத்திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது.

ஜனவரி 1 முதல், ஊதியம் வழங்குவதற்கு ஆதார் அடிப்படையிலான கட்டண முறையை (ஏ.பி.பி.எஸ் ABPS) அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த ஏ.பி.பி.எஸ் கட்டண முறையின் கீழ், தொழிலாளியின் ஆதார் அவரது 100 நாள் வேலை அட்டை மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மார்ச் 2022 வரை நகல், தகுதியற்ற பயனாளிகளை நீக்கியதன் மூலம் ஊதியத்தில் 10 சதவீதத்தை மிச்சப்படுத்தியுள்ளது.

இதுவரை 2024 நிதியாண்டில், 2.45 பில்லியன் நபர்களுக்கு வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இது 2023 நிதியாண்டில், இருந்ததைப் போலவே மார்ச் மாதத்திற்குள் 2.94 பில்லியனை எட்டும். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ஜூன் மாதத்தில் 3.37 பில்லியனாக இருந்த மாதவாரியான வேலைத் தேவை 2023 நவம்பரில் 1.77 பில்லியனாக குறைந்துள்ளது. இது டிசம்பரில் 1.99 பில்லியனாக குறைந்துள்ளது.

 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை சூடுபிடிக்க வைக்க எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் தன்னைப் பொறுத்தவரை “பெரிய சாதிகள்” என்று பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கூறினார். இந்த நான்கையும் உயர்த்தினால் நாடு வளர்ச்சி அடையும் என்றும் தெரிவித்தார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Likely hike of 50% in FY25 Budget outlay for MGNREGS

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Central Government MGNREGS

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: