‘ஒரு கோடி வாக்குகள் கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம்’ – பாஜக தலைவர் வாக்குறுதி

மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களுக்கு பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.

ஆந்திராவில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஒரு கோடி வாக்குகளைப் பெற்றால்,மக்களுக்கு ரூ.70க்கு மதுபானம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயவாடா கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்கள் நன்கு அறிந்த மற்றும் பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.

‘Special Status’, ‘Governor’s Medal’என்ற லேபிள்களின் கீழ் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அவர்கள் பிராண்டட் மதுபானங்களை விற்பனை செய்வதில்லை.

பாஜகவுக்கு ஒரு கோடி ஓட்டுக்கொடுங்கள். வெறும் 70 ரூபாய்க்கு மதுவை வழங்குகிறோம். அதே சமயம், வருமானம் மிச்சம் இருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், ” போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அரசு) மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு நபர் மதுபானம் வாங்கிட 12,000 ரூபாய் செலவிடுகிறார். இந்த பணத்தை அரசு வசூலித்துக்கொண்டு நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களுக்கு திருப்பி கொடுக்கிறது என்றார்.

பிராண்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், மாநிலத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது

அண்மையில், ஆந்திர மாநில அரசு மதுபானத்தின் மீதான வாட் வரியை குறைத்தது, ஆனால் ‘சிறப்பு மார்ஜின்’ சேர்ப்புடன் மதுபானம் MRP விலை மாறாமல் இருந்தது, நுகர்வோருக்கு பலன் அளிக்கப்படவில்லை. ஏழைகள் மத்தியில் மது அருந்துவதைக் குறைக்கும் அரசின் கொள்கைக்கு இணங்க விலைவாசி உயர்வது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Liquor at rs 70 if bjp gets one crore votes says party chief somu veerraju

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express