விஜய் மல்லையா பராக்: எந்த நேரமும் வந்து சேரலாம் எனத் தகவல்
vijay mallya extraditon : விஜய் மல்லையா எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று அமலாக்க இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிங் பிஷ்ஷர் விமான நிறுவனத்தின் தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபருமான விஜய் மல்லையா, எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என்று அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Advertisment
கடன் தொல்லைகள் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து விஜய் மல்லையா தப்பியோடினார். 17ற்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 9000 கோடிக்கும் மேல் பண மோசடி செய்ததாக சி.பி.ஐ-யும் அமலாக்கத்துறையும் வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
விஜய் மல்லாயாவை இந்தியாவுக்குக் கொண்டு செல்லத் தடையில்லை என லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்தியாவுக்கு ஒப்படைக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை கடந்த மே 14 அன்று இங்கிலாந்து உயர் நீதிமன்றமும் நிராகரித்தது.
எனவே, இங்கிலாந்தில் வசிப்பதற்கான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் இழந்த விஜய மல்லைலா எப்போது வேண்டுமானாலும் நாடு கடத்தப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,"மல்லையா தேவைப்பட்டால் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் கருணை மானுவை தாக்கல செய்யல்லாம். ஆனால், அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்த விரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்தில் வசிக்க முடியாத சூழலில் அவர் தானாக இந்தியா திரும்புவார்.1993ம் ஆண்டில், குற்றவாளிகளை பரஸ்பரம் நாடு கடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உச்சபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும் இரண்டு மாடிக் கட்டடத்தில் விஜய் மல்லையா அடைக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் சிறைச்சாலையின் மோசமான நிலையை சுட்டிக்காட்டிய விஜய் மல்லையா, இந்தியாவுக்கு தன்னை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று மனுவில் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil