கோயம்பேடு கற்றுத் தந்த பாடம் போதாதா? மதுவிற்காக விதிகளை காற்றில் பறக்கவிட்ட ”குடிமகன்கள்”!

இப்போது ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

By: Updated: May 4, 2020, 05:13:22 PM

Liquor shops opened after 40 days lockdown : கொரோனா வைரஸ் கற்றுத் தரும் பாடங்களை யாரும் கற்றுத் தர ரெடியாக இல்லை என்று தான் தோன்றுகிறது. பொதுவெளியில் நடமாடுதல், நெருக்கமான இடங்களில் சென்று திரும்புதல் போன்ற பல்வேறு காரணங்களால், ஒருவரில் இருந்து மற்றொருவருக்கு கொரோனா தொற்று பரவும் வாய்ப்பு மிகவும் அதிகமாக உள்ளாது.

இதனை மக்கள் சரியாக புரிந்து கொள்கின்றார்களா என்று பார்த்தால் அது தான் இல்லை. 40 நாட்கள் ஊரடங்கிற்கு பிறகும் பலரும் பொதுவெளியில் கூட்டமாக அலைவதை பார்த்தால் இந்தியாவில் கொரோனாவிற்கு ஆயுட்காலம் கூடுதல் தான் என்று தோன்றுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

சித்தூர் – ஆந்திரா

அரசு பணியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவரும், இது போன்ற ஒரு சூழல் உருவாக கூடாது என்று தான் வேண்டிக் கொண்டார்கள். ஆனால் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் மதுபான கடைகள் இயங்கலாம் என்று அறிவிப்பு வெளியானதும் நிலைமை என்னவோ தலைகீழாக தான் மாறிவிட்டது.

மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக சென்று மதுபானங்களை வாங்க காத்திருக்கின்றனர். சித்தூர் மற்றும் தமிழக – கர்நாடக எல்லைப் பகுதியில் நிலைமை மேலும் மோசம். அடிதடி மல்லுக்கட்டுடன் மதுபானங்களை வாங்க மக்கள் காத்திருப்பது வேதனை அளிக்கிறது.

பெங்களூரு புறநகர் பகுதி – கர்நாடகா

சப்ளை தீர்ந்துவிட்டால், கடையில் பணியாற்றும் ஊழியர்களின் நிலையும் வருத்தம் கொள்ளத்தான் வைக்கிறது. ஆந்திராவில் மதுபானங்களின் விலையை 25% உயர்த்தி அறிவித்துள்ளது அம்மாநில அரசு. அப்படி செய்தால் சமூக இடைவெளியை பின்பற்றி மதுக்களை வாங்க கூட்டம் குறைவாகவே வரும் என்று அவ்வரசு எண்ணியுள்ளது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் வீடியோக்களை பார்த்தால் அப்படி ஒன்றும் நடந்தது போன்று தெரியவில்லை.

மும்பை, மகாராஷ்ட்ரா

கோயம்பேடு நிலவரம் போல், புதிதாக எத்தனை பாதிப்புகள் வருமோ என்று தான் யோசிக்க வேண்டியுள்ளது.  மதுபழக்கத்திற்கு  ஆளானவர்கள் பலரும், கள்ளச்சாராயம், குக்கர் சாராயம், விஷக்காய்கள் என்று மாற்று போதை பொருட்களுக்கு தங்களை காவு கொடுத்துவருகிறார்கள். ஆனால் முறையாக விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் இந்நிலையை சமாளித்திருக்கலாம் என்றும், இப்போது ஏன் மதுக்கடைகளை திறக்க வேண்டும்? அதற்கு என்ன அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

சத்தீஸ்கர்


தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Liquor shops opened after 40 days lockdown people rushed to wine shops without maintaining social distance

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X