புதன்கிழமை (ஏப்.12) அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. இரண்டாவது பட்டியலில் 6 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் வழங்கப்படவில்லை.
இந்த சீட் மறுக்கப்பட்ட பட்டியலில் காவேரி எம்.எல்.ஏ. நேரு ஓலேகரும் உள்ளார். இவர், நிதி முறைகேடு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் ஆவார்.
இவர் பசவராஜ் பொம்மை மீதான குற்றச்சாட்டுகளை அமல்படுத்துவேன் என்றார்.
இது தொடர்பாக ஒலேகர், “பொம்மை முதலமைச்சராக இருந்த காலத்திலும் அதற்கு முன்னரும் பல ஊழல்கள் நடந்துள்ளன. பல குறைபாடுகள் இருந்தன. அதை வரும் நாட்களில் அம்பலப்படுத்துவோம். விசாரணைக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த பொம்மை, “அவர் இந்த குற்றச்சாட்டுகளை ஆவணங்களுடன் கூறட்டும். விசாரித்தால் உண்மை வெளிவரும்” என்றார்.
இதற்கிடையில், மூன்று முறை முடிகெரே எம்.எல்.ஏ.வான, குமாரசாமிக்கும் டிக்கெட் வழங்கப்படவில்லை. அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
தொடர்ந்து எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு சி.டி. ரவிதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர், “எடியூரப்பா இல்லாமல் பாஜகவால் பேரணிகளுக்கு மக்களை ஈர்க்க முடியாது. ஒருவாரம் போனை அணைத்தால் பாஜக 50 இடங்களில் கூட வெற்றி பெறாது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுகுமார் ஷெட்டி (பைந்தூர்), மடல் விருபக்ஷப்பா (சன்னகிரி), பேராசிரியர் லிங்கண்ணா (மாயகொண்டா) மற்றும் சி எம் நிம்பன்னவர் (கல்கத்கி) ஆகியோரும் இரண்டாவது பட்டியலில் டிக்கெட்டுகளை இழந்துள்ளனர். ஆக மொத்தம் 14 பேருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரபல ரவுடி சைலண்ட் சுனில் ஆதரவாளர்களும் பாஜகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சுனில் கட்சியில் இணையவில்லை என பாஜக கூறினால், அவர் பாஜக தலைவர்கள் உடன் மேடையை பகிர்ந்துக் கொண்டார்.
இதற்கிடையில், ஜெயநகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.ரமேஷ் ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செவ்வாய்க்கிழமை முதல் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, “பாஜக தன்னை நிறுத்தாவிட்டாலும் போட்டியிடுவேன்” என்று கூறிய முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், தொடர்ந்து டிக்கெட்டுக்காக லாபி செய்தார்.
அவர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் ஹூப்ளி-தர்வாட் சென்ட்ரலுக்கான வேட்பாளரை கட்சி இன்னும் இறுதி செய்யவில்லை. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியுடன் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவையும் ஷெட்டர் புதன்கிழமை டெல்லியில் சந்தித்தார். மற்ற தலைவர்களுடன் பேசி அழைப்பதாக அவர் (நட்டா) கூறினார். அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள், அதற்கு நான் கட்டுப்படுவேன்,'' என்றார்.
கர்நாடகாவில் கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய முற்படும் மாணவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்களில் ஒருவரான உடுப்பியில் மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த ரகுபதி பட், யஷ்பால் சுவர்ணாவிடம் சீட்டில் தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், புதன்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், ஒரு வெளிப்படையான உணர்ச்சிவசப்பட்ட பட் கூறுகையில், “கட்சியின் முடிவைப் பற்றி நான் வருத்தப்படவில்லை. ஆனால் அவர்கள் என்னை நடத்திய விதம் வருத்தமளிக்கிறது” என்றார்.
தொடர்ந்து, ஜாதியை காரணம் காட்டி என்னை வேட்பாளராக நிறுத்த முடியாது என்று மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு முன்பே என்னிடம் கூறியிருந்தால், நான் (முன்னாள் அமைச்சர்) கே.எஸ்.ஈஸ்வரப்பாவைப் போல் ஒப்புக்கொண்டு முடிவெடுத்திருப்பேன்” என்றார்.
முதல் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததால் ஈஸ்வரப்பா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இதற்கிடையில், ஷிமோகா தொகுதியில் போட்டியிடும் ஈஸ்வரப்பாவின் மகன் கே.இ.காந்தேஷ் பெங்களூருவில் பாஜக மூத்த தலைவர்களை வியாழக்கிழமை சந்தித்தார். அந்த தொகுதிக்கான வேட்பாளரை கட்சி இன்னும் அறிவிக்கவில்லை.
ஆறு முறை எம்.எல்.ஏ.வும், மாநில அமைச்சருமான எஸ். அங்காராவும் சுல்லியாவில் டிக்கெட் வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் "மகிழ்ச்சியற்ற" தலைவர்களுடன் பேசுவார்கள் என்று பொம்மை கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“