”ஹெல்மெட் வேண்டாம் வீரனாகவே சாக ஆசைப்படுகிறேன்”..ட்ராபிக் போலீசை திணற அடித்த பைக் வசனம்!

ஹைதரபாத்தில்   இளைஞர் ஒருவரின்  பைக்கில் இடம் பெற்றிருந்த வசனம்,  ட்ராஃபிக் போலீசையே திணற அடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கடந்த சில மாதங்களாக ட்ராஃபிக் போலீஸ் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகின்றன.   குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில்,  திருச்சி உஷா,  சென்னை பிரகாஷ் போன்றோரின்…

By: Updated: April 30, 2018, 10:40:19 AM

ஹைதரபாத்தில்   இளைஞர் ஒருவரின்  பைக்கில் இடம் பெற்றிருந்த வசனம்,  ட்ராஃபிக் போலீசையே திணற அடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

கடந்த சில மாதங்களாக ட்ராஃபிக் போலீஸ் மீதான அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் பரவி வருகின்றன.   குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரையில்,  திருச்சி உஷா,  சென்னை பிரகாஷ் போன்றோரின் சம்பவம் ட்ராஃபிக் போலீஸ் மீதான கறையை இன்னும் பகிரங்கமாக காட்டியது.

ஹெல்மெட் போடாத காரணத்தினால், இவர்கள் இருவரும் மீது அரங்கேறிய வன்முறை  பொதுமக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அதே நேரத்தில் எல்லா  ட்ராஃபிக் போலீஸும்  கெட்டவர்கள் என்று பொதுவாக கூறி விட முடியாது. ரோட்டில் செல்லும் எத்தனையோ இளைஞர்களை அழைத்து, ஹெல்மெட் வாங்கிக் கொடுத்த போட சொன்ன சில அருமையான போலீஸும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில், ஹைதரபாத்தில் பிரதான சாலையின் சிக்னல் ஒன்றில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரின் பைக்கில் இந்த வசனம் இடம் பெற்றிருந்தது.“ ஹெல்மெட் வேண்டாம் வீரனாகவே சாக ஆசைப்படுகிறேன்” என்று. இந்த வசனத்தை சிலர் புகைப்படமும் எடுத்து சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் தான்,  இந்த ஃபோட்டைப் பார்த்த ஹைதரபாத் காவல் துறையினர்,   அந்த பைக்கை ஓட்டிச் சென்ற  நபரின் முழு விவரத்தையும் எடுத்துள்ளனர். அதன் பின்பு, ஹைதரபாத் காவல் துறையினரின் அதிகார ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் நெகிழும் படியான பதிவு ஒன்றையும்  வெளியிட்டனர்.

அதில், “ மன்னிக்கவும் MR. கிருஷ்ண ரெட்டி,  நாங்கள் நீங்கள் வீரனாக சாவதை விரும்பவில்லை. வீரனாக நீங்கள் வாழவே ஆசைப்படுகிறோம். ஹெல்மெட் அணிந்து  செல்லவும்” என்று தெரிவித்தனர்.

 

இந்த பதிவு,  அன்றைய நாளே சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Live like real men hyderabad traffic police tears down mans no helmet quote on bike

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X