மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியே உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் நேற்று (வெள்ளிக்கிழமை) அங்கீகரித்து கட்சியின் பெயர், தேர்தல் சின்னமான “வில் அம்பு” சின்னத்தை ஒதுக்கி அறிவித்தது.
தேர்தல் ஆணைத்தின் 78 பக்க உத்தரவில், மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் முடியும் வரை உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு ஒதுக்கப்பட்ட “சுடர் ஜோதி” தேர்தல் சின்னத்தை வைத்திருக்க ஆணையம் அனுமதித்தது.
2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 55 சிவசேனா கட்சி எம்.எல்.ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவு அளித்ததாகவும் மொத்தமாக 76 சதவீத வாக்குகளை அவர் பெற்றதாகவும் ஆணையம் கூறியது.
உத்தவ் தாக்கரே தரப்பினர் 23.5 சதவீத வாக்குகள் பெற்றதாக 3 பேர் கொண்ட ஆணையம் ஒருமனதாக அறிவித்தது. 2022-ம் ஆண்டு மகாராஷ்டிர அரசில் ஏற்பட்ட பிரச்சனையையடுத்து அக்டோபரில் தேர்தல் ஆணையம் கட்சியின் பெயர் மற்றும் வில் அம்பு சின்னத்தை முடக்குவதற்கான இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அந்தேரி கிழக்கு தொகுதிக்கு நவம்பரில் இடைத்தேர்தல் நடக்கவிருந்த நிலையில் இந்த உத்தரவை ஆணையம் பிறப்பித்தது.
சிவசேனா தீர்ப்பையடுத்து அ.தி.மு.கவின் இரட்டை இலை பிரச்சனையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இதேபோன்று எல்.ஜே.பி, எஸ்.பி கட்சியின் தேர்தல் சின்னப் பிரச்சனைகளைப் பார்ப்போம்.
லோக் ஜனசக்தி கட்சியின் (எல்.ஜே.பி) பங்களா சின்னம்
தேர்தல் ஆணையம் கடைசியாக லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தேர்தல் சின்னமான ‘பங்களா’வை கடந்த அக்டோபர் 2021-ம் ஆண்டு முடக்கியது. ஜூன் 2021-ல் கட்சி உடைந்ததையடுத்து முடக்கியது. சிவசேனாவைப் போலவே, மறைந்த ராம்விலாஸ் பஸ்வானின் கன் சிராக் பாஸ்வான் மற்றும் பசுபதி தலைமையிலான எல்ஜேபியின் இரு பிரிவுகளும் கட்சியின் சின்னத்தை பயன்படுத்த முடியாமல் போனது. அந்த ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி
லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தேர்தல் சின்னமான ‘பங்களா’வை முடக்கியபோது, அக்டோபர் 2021 இல் இதேபோன்ற முடிவை ECI கடைசியாக எடுத்தது. ஜூன் 2021ல் கட்சி பிளவுபட்டது. சிவசேனாவைப் போலவே, மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் மற்றும் பசுபதி தலைமையிலான எல்ஜேபியின் இரு பிரிவுகளில் எதுவுமே இல்லை என்பதை உறுதி செய்வதே அந்தச் சந்தர்ப்பத்தில் நோக்கமாக இருந்தது. மூத்த பாஸ்வானின் சகோதரர் குமார் பராஸ் – அந்த ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி திட்டமிடப்பட்ட பீகாரில் உள்ள குஷேஷ்வர் அஸ்தான் மற்றும் தாராபூர் தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் இதைப் பயன்படுத்தலாம். ஜனதா தளம் (ஐக்கிய) தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க (இரட்டை இலை)
கடந்த 2017-ம் ஆண்டு இடைத்தேர்தலில் சசிகலா, தினகரம் மற்றும் இ.பி.எஸ்- ஓபிஎஸ் அணியினர் இரட்டை இலை சின்னம் பெற உரிமை கோரியதால் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இது மார்ச் மாதத்தில் நடந்தது, இப்போது இபிஎஸ்-ஓபிஎஸ் மற்றும் சசிகலா-தினகரன் ஆகிய பிரிவுகளின் வாதங்களை தேர்தல் ஆணையம் நவம்பர் 8, 2017 அன்று கேட்டது. பின்னர் நவம்பர் மாதம் பெரும்பான்மை ஆதரவாளர்களுடன் சின்னம் இ.பி.எஸ்- ஓ.பி.எஸ் அணிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில், அ.தி.மு,கவில் தற்போது இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஒன்றை தலைமை விவகாரம் நடைபெற்று வருகிறது. ஈரோடு இடைத்தேர்லில் இ.பி.எஸ் அணி அறிவித்த வேட்பாளரே இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சிவசேனா நேரத்தில் தீர்ப்பு வெளியானதால் அ.தி.மு.க இரட்டை இலை சின்னத்திலும் விரைவில் முடிவு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“