Advertisment

இந்தியா - பாக். எல்லையில் குறைந்த போர்நிறுத்த விதிமுறை மீறல்கள்... ஆனால் பதட்டம் தணியவில்லை!

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
LoC Ceasefire Violations reduced

LoC Ceasefire Violations reduced

Sushant Singh

Advertisment

LoC Ceasefire Violations reduced : 3 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறை மீறல்கள் குறைந்துள்ளன. காலிபர் வெப்பன்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், ஆர்ட்டிலரி துப்பாக்கிகளின் பயன்பாடு குறைப்பும் இந்த பெரும் மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்று அரசு தரப்பு கூறுகிறது. இந்த நடவடிக்கையானது பாலகோட் தாக்குதலுக்கு பிறகு நடைமுறைபடுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மார்ச் மாதம் 267 முறை போர்நிறுத்த விதிமுறைகள் மீறப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்றன. ஆனால் ஜூன் மாதத்தில் 181 ஆக அது குறைந்துள்ளது.  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பு ஆர்ட்டிலரி துப்பாக்கிகளை பயன்படு்த்தி தாக்குதல் நடத்தி வந்தது. தற்போது இந்த தாக்குதல்களும் குறைந்துள்ளன. இதனால் போர் நிறுத்த விதிமுறை மீறல்களும் குறைந்துள்ளதே தவிர, எல்லைகளில் பதட்டமான சூழலில் மாற்றங்கள் ஏதும் இல்லை.

2003ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 2016ம் ஆண்டு வரை நீடித்து வந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் உரியில் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவப்படையினர் உயிரிழக்க, இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானிற்குள் சென்று, தீவிரவாத முகாம்களில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தியது.

அதன் பின்பு போர்நிறுத்த ஒப்பந்த விதிமுறை மீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது. 2016ம் ஆண்டில் இது போன்ற விதிமுறை மீறல்கள் 228 என்று பதிவாகியிருந்தன. 2017ல் அது நான்கு மடங்காக உயர்ந்து 860 ஆக பதிவானது. இந்த வருடத்தின் ஜூன் மாத முடிவு வரை 1321 ஆக அது பதிவாகியுள்ளது. உயர்தர காலிபர்கள் பயன்பாட்டிற்கு வந்த பிறகான விதிமுறை மீறல்கள் குறித்த தரவுகள் கிடைக்கப்பெறவில்லை.

இந்த விதிமுறை மீறல்கள் குறைக்கப்படுவதற்காக இரு தரப்பில் இருந்தும் ஹாட்லைன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இரு தரப்பினருக்கும் இடையேயான பிரச்சனைகளை வாரத்திற்கு ஒரு முறை டி.ஜி.எம்.ஓக்கள் பேசி வருகின்றனர். உள்ளூர் காமாண்டர்களுக்கு கொடுக்கப்பட்ட ஹாட்லைன்கள் கடந்த சில வருடங்களாக பயன்படுத்தப்படவே இல்லை என்று ராணுவ அதிகாரிகள் அறிவிக்கின்றனர்.

மேலும் படிக்க : இந்த கட்டுரையின் முழுமையான ஆங்கிலப் பிரதியைப் படிக்க

Jammu And Kashmir Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment