பொதுமக்கள் பங்களிப்பே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வு: எய்ம்ஸ் இயக்குனர்
ஊரடங்கு எதற்கும் தீர்வாக அமைய முடியாது. இணையான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும். மக்கள் தங்கள் பங்களிப்பை முதலில் உணர வேண்டும். அதுதான் பெரிய சமூக பங்களிப்பை உருவாக்கும்.
ஊரடங்கு எதற்கும் தீர்வாக அமைய முடியாது. இணையான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும். மக்கள் தங்கள் பங்களிப்பை முதலில் உணர வேண்டும். அதுதான் பெரிய சமூக பங்களிப்பை உருவாக்கும்.
காலவரையற்ற ஊரடங்கின் மூலமாக நாம் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியாது, சமூக பங்களிப்பை முதன்மைபடுத்துவதே சிறந்த வழியாக இருக்கு முடியும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரும் புகழ்பெற்ற நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார். '
Advertisment
ரன்தீப் குலேரியா தலைமையிலான குழு, நோய் தடுப்பு நடவடிக்கையை மேற்பார்வையிடுவதற்காக குஜாரத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
நேற்று, 1200 படுக்கை வசதியுடன் தொடங்கப்பட்ட பிரத்தியோக கொரோனா தடுப்பு மருத்துவமனையை ஆய்வை மேற்கொண்ட பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், " குஜராத் மாநிலத்தில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் அறியாமை. கொரோனா தொற்று சமூகத்தில் களங்கமாக பார்க்கப்படுகிறது. இதனால், கொரோனா தொடர்பான அறிகுறிகளை மக்கள் தாமதமாகத் தான் தெரிவிகின்றனர். கோவிட்-19 நோயை நாம் உண்மையில் தோற்கடிக்க வேண்டுமெனில்,“ மருத்துவமனையோடு நின்று விடமால் சமூக மட்டத்தில் நோய் தடுப்பு நடவடிகைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
Advertisment
Advertisements
அறிகுறிகள் லேசாக இருந்தாலும், சிலருக்கு இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைய வாய்ப்புள்ளது. இதன் விளைவாக, உறுப்புகளின் மீதான அழுத்தம் அதிகரிப்பதால், இறப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. முறையான நேரத்தில் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப் பட்டிருந்தால், உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் தெரிவித்தார்.
நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள், வயதானவர்கள், உயர் இரத்த அழுத்தம், இருத நோய் போன்ற பல நோய்கள் ஒரு சேர இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறிய ரன்தீப், " இந்த வகை மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியம். வீட்டில் முதியவர்கள் இருந்தால், அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் சிறு அறிகுறிகள் தென்பட்டால் கூட, உடனடியாக சுகாதார நிலையத்தில் பரிசோதிக்க வேண்டும்,”என்று தெரிவித்தார்.
வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வா? என்று கேட்கப்பட்டதற்கு,“கொரோனா பாதிப்பையும், இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம். அதனால்தான், தொடர்ச்சியான மற்றும் கடுமையான ஊரடங்கு உத்திகளை நாம் பயன்படுத்திகிறோம். காலவரையற்ற ஊரடங்கு எதற்கும் தீர்வாக அமைய முடியாது. இணையான தீர்வையும் நாம் கண்டறிய வேண்டும். மக்கள் தங்கள் பங்களிப்பை முதலில் உணர வேண்டும். அதுதான் பெரிய சமூக பங்களிப்பை உருவாக்கும். கை கழுவுதல், முகக் கவசம் அணிதல், சமூக தூரத்தைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கையின் மூலம் ஊரடங்கு இல்லாமல், இந்த பரவலை கட்டுபடுத்தலாம். பல நாடுகள் அதைச் செய்துள்ளன. ஸ்வீடனின் வெற்றிக்கு முக்கிய காரணாம் அந்த மக்களின் பங்கேற்பு. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மற்ற நாடுகளோடு ஒப்பிட முடியாது என்றாலும், இந்த சவாலை தைரியமாக சந்தித்தாக வேண்டும்" என்று தெரிவித்தார்.
அகமதாபாத், சூரத், காந்திநகர் ஆகிய பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து முழுமையான ஊரடங்கை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil