/tamil-ie/media/media_files/uploads/2020/04/image-67.jpg)
சிக்கித் தவிக்கும் நபர்களின் சாலை வழிப் பயணத்தை மத்திய அரசு அனுமதித்தாலும், இலக்குகளை அடைய காத்திருப்பவர்களின் எண்ணிக்கையை அடிக்கோடிட்டு பல மாநிலங்கள் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளது. விரிவான நெறிமுறைகளோடு, நாளொன்றுக்கு 400 சிறப்பு ரயில்களை இயக்கும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் உருவாக்கியுள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில் இது 1,000 வரை அதிகரிக்கக்கூடும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மே 3-ம் தேதிக்கு முன்னதாக பயணிகள் ரயில் சேவைகள் தொடங்குவது குறித்த அறிகுறிகள் இல்லாவிட்டாலும், ரயில்வே துறை தானாகவே இந்த யோசனைகளை தொகுத்து, அரசின் உயர் மட்டங்களுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சமூக தூரத்தை உறுதி செய்யும் வகையில் ஏசி அல்லாத ரயிலில் ஒரு பயணத்திற்கு 1,000 (வழக்கத்தை விட பாதி) பேரை கொண்டு இயக்கம் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரயில்களுக்கு பதிலாக சாலை வழி மூலமாக சிக்கித் தவிக்கும் நபர்களின் பயணங்களை மத்திய அரசு அனுமதித்திருப்பதன் மூலம், பயணப்படுவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மூலோபாய ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
மத்திய அரசின் நேற்றைய அறிவிப்பு, தங்களது இலக்குகளை அடைய துடிக்கும் நபர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இருந்தாலும், நீண்ட தூர பயணத்திற்கு உண்மையில் இது சாத்தியமான தீர்வு அல்ல" என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
ரயில்களை இயக்க வேண்டும் என்ற பல மாநிலங்களின் கோரிக்கையை அனுமதிப்பதற்கு முன், நிலைமையை முதலில் அறிந்து கொள்வதற்கான ஒரு முன்னேற்பு நடவடிக்கையாக நேற்றைய அறிவிப்பு இருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன -.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் நேற்று தனது ட்வீட்டரில் : “இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடமாட்டத்திற்கான நீண்டகால கோரிக்கையை இறுதியாக மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட்டுள்ளது. இது ஒரு வரவேற்கத்தக்க முதல் படி. எனினும், ரயில்வே இயக்கத்தை மீண்டும் அனுமதிக்கும் வரை - நடைமுறையில் அவர்கள் பயணம் எளிதானதல்ல. ஓரிரு நாட்களில், தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் , அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வருக பதிவு செய்துள்ளனர். ரயில்வே துறை முழு மூச்சில் செயல்பாடு அனுமதிக்க வேண்டும் ” என்று பதிவு செய்துள்ளார்.
அம்மாநில உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவா ஸ்வரூப் கூறுகையில்“ இந்த பிரச்சினையை ஏற்கனவே முதல்வர் எழுப்பியிருந்தார். ராஜஸ்தானியர்கள் மற்ற மாநிலங்களில் அதிக அளவில் இருப்பதால், பேருந்துகள் மூலம் மட்டும் அவர்களின் பயணத்தை உறுதி செய்ய முடியாது ”
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தனது மாணவர்களையும் புலம்பெயர் தொழிலாளர்களையும் திரும்ப அழைத்து வர மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் தேவை என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலிடம் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தின் நேற்றைய உத்தரவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். இருப்பினும், அதை செயல் வடிவம் கொடுக்கும் சூழலி நாங்கள் இல்லை என்பதை நான் முன்பே தெளிவுபடுத்தியிருந்தேன் . இந்த விஷயம் பியுஷ் கோயல்ஜியுடன் நான் சில விசயங்களை கூறியுள்ளேன்,”என்று அவர் கூறினார்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6.43 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உட்பட 9 லட்சத்துக்கும் அதிகமானோர், சிக்கித் தவிப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் முந்தைய உரையாடல்களில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோரும் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கையை எழுப்பியிருந்தனர்.
ஏப்ரல் 23 ம் தேதி, மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில்,"பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு செல்ல சிறப்பு ஏற்பாடுகளை தேவை" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஒடிசா, உத்தரபிரதேச அதிகாரிகளும், இன்ஃபார்மல் முறையில் ரயில்வே அமைச்சகத்திடம் இதுகுறித்து பேசியுள்ளனர்.
சிக்கித் தவிக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதுவரை முன்னிலைப்படுத்தாத, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், நேற்றைய உத்தரவுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். "இந்த முடிவு பொருத்தமானது மற்றும் வரவேற்கத்தக்கது. இது தான் எங்கள் கோரிக்கை, மத்திய அரசு சாதகமான முடிவை எடுத்துள்ளது, ” என்று பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம் இந்த முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். மேலும், கிருமிநாசினி செய்யப்பட்ட , பாயிண்ட் -டு-பாயிண்ட் ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஏனெனில் பேருந்துகள் போதுமானதாக இருக்காது. ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து காங்கிரஸ் இந்த கோரிக்கையை எழுப்பி வருவதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்ற வதந்தியைத் தொடர்ந்து ஏப்ரல் 14 ம் தேதி மும்பையில் உள்ள பாந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் கூடியிருந்தனர். இதுபோன்ற ஒரு அசாதாரண சூழல் மீண்டும் எழ அரசாங்கம் விரும்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.