/tamil-ie/media/media_files/uploads/2020/04/PM-Narendra-modi.jpg)
Lockdown extension modi speech viewed by 20.3 crore people : கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு நான்கு முறை உரை நிகழ்த்தியுள்ளார். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதி முடிவடைந்தது. ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக பிரதமர் ஏப்ரல் 14ம் தேதி 25 நிமிடம் உரை நிகழ்த்தினார்.
மேலும் படிக்க : தி.மலை குகைக்குள் 10 நாள் முடங்கிய சீனப் பயணி: அதிகாரிகள் அழைத்துச் சென்று பரிசோதனை
அந்த உரையில் ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே 3-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தார். மேலும் பல்வேறு முக்கிய முடிவுகளை மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என்று கூறியிருந்தார். புலம் பெயர் தொழிலாளர்கள், தொழிற்சாலைகளின் முடக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நஷ்டம், பொருளாதார சீரழிவு குறித்து அவர் எதுவும் பேசவில்லை.
ஆனாலும் அந்த வீடியோ உலக அளவில் 20 கோடியே 30 லட்சம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர். கூகுள் தேடுதளம் மூலம் தேடிச் சென்று மக்கள் இந்த வீடியோவை பார்த்துள்ளாதாக அறிவித்துள்ளது ஒளிபரப்பு நேயர்கள் ஆராய்ச்சி கவுன்சில் (Broadcast Audience Research Council).
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.