Advertisment

2019இல் வென்ற 303 இடங்களில் 92ஐ இழந்த பா.ஜ.க.: உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் பெரும் பின்னடைவு

இந்த 92 இடங்களில் 29 இடங்களை கைப்பற்றிய உத்தரபிரதேசத்தில் கட்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.

author-image
WebDesk
New Update
bjp loss map

BJP’s loss map: Lost 92 of its 303 seats, won in 32 new constituencies

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

2019 இல் பாஜக வென்ற 303 இடங்களில், அது இந்த முறை 208 இடங்களைத் தக்க வைத்துக் கொண்டது, 92 ஐ இழந்தது மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (ஐக்கிய), ஜனதா தளம் (மதச்சார்பற்ற), மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் - தலா ஒரு இடத்தை வென்றது. மேலும் 2024 இல் 32 புதிய இடங்களை வென்று அதன் எண்ணிக்கையை 240 ஆக உயர்த்தியது.

Advertisment

அது இழந்த 92 இடங்களைப் பற்றி சொல்லும் ஆய்வு

*பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகள்

*இந்த 92 இடங்களில் 29 இடங்களை கைப்பற்றிய உத்தரபிரதேசத்தில் கட்சி மிகப்பெரிய இழப்பை சந்தித்தது

*காவி கட்சி பெரும் பின்னடைவை சந்தித்த மற்ற மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் 16 மற்றும் 10 இடங்களை இழந்தன.

*மேலும், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகளிலும் அக்கட்சி தோல்வியை சந்தித்தது

*ஹரியானாவில் பாஜக 5 இடங்களை இழந்த நிலையில் அதன் எண்ணிக்கை பாதியாக குறைந்தது.

*பீகாரில் 5 இடங்களையும், ஜார்கண்டில் 3 இடங்களையும், பஞ்சாபில் 2 இடங்களையும், அசாம், சண்டிகர், டாமன் & டையூ, குஜராத், லடாக் (2019 இல் ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாக இருந்தது) மற்றும் மணிப்பூரில் தலா ஒரு இடங்களையும் இழந்தது. மொத்தத்தில், 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 92 இடங்களை பாஜக இழந்தது.

பொது தொகுதி மற்றும் தனித் தொகுதி பிரிவுகளிலும் கூட பாஜகவின் தோல்வி பரவியது. பாஜக இழந்த 92 இடங்களில் 63 பொது, 18 எஸ்சி மற்றும் 11 எஸ்டிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதி.

இந்த இடங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்தன, ஆனால் மும்பை வடக்கு மத்திய மற்றும் மும்பை வடகிழக்கு போன்ற நகர்ப்புற தொகுதிகளை உள்ளடக்கியது, அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாஜகவை தோற்கடித்தன.

92 தொகுதிகளில், 11 தொகுதிகள் - ஔரங்காபாத், தும்கா, லோஹர்டகா, குல்பர்கா, ராய்ச்சூர், கட்சிரோலி-சிமூர், பார்மர், கரௌலி-தோல்பூர், பண்டா, சந்தௌலி மற்றும் ஃபதேபூர்- நாட்டின் ஏழ்மையான மாவட்டங்களான (Aspirational Districts) முன்னேற்றத்திற்கு ஆர்வமுள்ள மாவட்டங்களில் இருந்தன.

இந்த மாவட்டங்களில் பாஜக இழந்த 11 இடங்களில் 6 மற்றும் 3 இடங்களில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் பாஜகவை அதிகம் தாக்கின.

மொத்தம் உள்ள 92 இடங்களில், மகாராஷ்டிராவில் 9, ராஜஸ்தானில் 8 மற்றும் உத்தரபிரதேசத்தில் 4 என மொத்தம் 42 இடங்களை பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் கைப்பற்றியது.

மாநில வாரியாக பாஜக இழந்த இடங்கள்

bjp loss map

பாஜகவை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி 25 இடங்களை வென்றது, அவை அனைத்தும் உத்தரபிரதேசத்தில்.

வங்காளத்தில் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் (AITC) மற்றும் மகாராஷ்டிராவில் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP-SP) முறையே 8 மற்றும் 5 இடங்களைப் பெற்றன.

அந்த 92 இடங்களில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற மற்ற கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி, பாரத் ஆதிவாசி கட்சி, சிபிஐ (எம்எல்) (எல்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சரத்சந்திர பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், மற்றும் சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே)

2019 ஆம் ஆண்டில், பாஜகவின் 303 இடங்களில் 77 இடங்கள் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டவை. இவற்றில், 2024 மக்களவைத் தேர்தலில் காவி கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 48 இடங்களை மட்டுமே தக்கவைக்க முடிந்தது, மீதமுள்ள 29 இடங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றின.

இந்த 92 இடங்களில் பாஜக படுதோல்வியை சந்தித்தாலும், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 32 புதிய தொகுதிகளை வென்றது, இது காவி கட்சி தனது மொத்த எண்ணிக்கையை 240 ஆக உயர்த்த உதவியது.

இந்த 32 புதிய இடங்களில், அதிகபட்சமாக ஒடிசாவில் இருந்து 12, தெலுங்கானாவில் இருந்து 4, மகாராஷ்டிரா மற்றும் ஆந்திராவில் இருந்து தலா மூன்று, மேற்கு வங்கத்தில் இருந்து இரண்டு மற்றும் பீகார், தாத்ரா & நகர் ஹவேலி, சத்தீஸ்கர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்து தலா ஒரு இடங்கள் வந்துள்ளன.

இந்த 32 இடங்களில், மூன்று பட்டியல் சாதியினருக்கும், 5 பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டது.

Read in English: BJP’s loss map: Lost 92 of its 303 seats, won in 32 new constituencies

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Congress Vs Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment