Advertisment

பாலியல் குற்றவாளிகளுக்கு பிரதமர் மோடி மௌன ஆதரவு- கர்நாடகா எம்.பி. வழக்கில் ராகுல், பிரியங்கா தாக்குதல்

எல்லாம் தெரிந்திருந்தும், நூற்றுக்கணக்கான பெண்ளை சுரண்டிய அரக்கனை, வெறும் ஓட்டுக்காக ஏன் அவர்கள் (பாஜக) உயர்த்தினார்கள் என்பதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்?

author-image
WebDesk
New Update
Rahul and Priyanka

‘Is being part of Modi’s political family a safety guarantee for criminals?’: Rahul, Priyanka step up attacks over Karnataka sex abuse case

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஜேடி(எஸ்) எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் தொடர்பாக பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இருவரும் புதன்கிழமை தங்கள் தாக்குதலை முடுக்கிவிட்டனர். கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கூட்டணியில் உள்ளன.

Advertisment

இணையத்தில் ராகுல் ஒரு பதிவில், ”கர்நாடகாவில் பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் குறித்து நரேந்திர மோடி வழக்கம்போல் வெட்கக்கேடான மௌனம் சாதித்து வருகிறார். எல்லாம் தெரிந்திருந்தும், நூற்றுக்கணக்கான பெண்ளை சுரண்டிய அரக்கனை, வெறும் ஓட்டுக்காக ஏன் அவர்கள் (பாஜக) உயர்த்தினார்கள் என்பதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்? இவ்வளவு பெரிய குற்றவாளி எப்படி இவ்வளவு சுலபமாக நாட்டை விட்டு தப்பினார்?

கைசர்கஞ்ச் முதல் கர்நாடகா, உன்னாவ் முதல் உத்தரகாண்ட் வரை, பெண்களைக் குறிவைக்கும் குற்றவாளிகளுக்கு பிரதமரின் மௌன ஆதரவு குற்றவாளிகளின் மன உறுதியை அதிகரிக்கிறது.

மோடியின் அரசியல் குடும்பத்தின்அங்கமாக இருப்பது குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதமா?” என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

அசாமில் பேசிய பிரியங்கா, “இவர்கள் (பாஜக தலைவர்கள்) பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். கர்நாடகாவில் நடப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களின் கட்சியுடன் தொடர்புடையவர்கள் இத்தகைய குற்றங்களைச் செய்துள்ளனர்.  ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வெளிவந்துள்ளன. அந்தக் குற்றங்களைச் செய்தவருக்கு மோடிஜி பிரச்சாரம் செய்தார். குற்றவாளி நாட்டை விட்டு ஓடிவிட்டார், யாரும் அவரைத் தடுக்கவில்லை. மோடிஜியோ, அமித்ஷாவோ அவரைத் தடுக்கவில்லை. அவரை தப்பிக்க அனுமதித்தனர்.

உ.பி.யில் உள்ள ஹத்ராக்களாக இருந்தாலும் சரி, உன்னாவோவாக இருந்தாலும் சரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எங்கு நடந்தாலும், மோடிஜி அமைதியாக இருக்கிறார். மாறாக, அவர்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்க முயன்றனர்...

மணிப்பூரில், ராணுவ வீரர் மனைவியின் ஆடைகளை அவிழ்த்து அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த வீடியோவை அனைவரும் பார்த்தனர். மோடிஜி, அமித்ஷா கூட பார்த்திருக்க வேண்டும். அப்படியிருக்க அவர்கள் ஏன் மௌனமாக இருந்தார்கள்?

பெண்கள் அதிக சுமையை சுமப்பவர்கள், வேலைக்குச் செல்கிறார்கள், வயல்களுக்குச் செல்கிறார்கள், பிறகு வீட்டுக்கு வந்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்கள், உணவு சமைத்துக் கொடுத்து, எல்லோரையும் கவனித்துக் கொள்கிறார்கள்... அவர்களுக்காக பாஜக அரசு எதையும் வழங்குவதில்லை.

உண்மை என்னவென்றால், நீங்கள் 5 கிலோ ரேஷன் மற்றும் அதனுடன் அசாம் அரசாங்கத்தின் பெண்களுக்கான ஒருனோடோய் நிதி உதவி திட்டத்தின் கீழ், ரூ.1,200 மட்டும் தான் பெறுவீர்கள். அதைக் கொடுத்துவிட்டு பிரதமர் மோடி உங்களின் வாயை திறக்க கூடாது என்று கூறுகிறார் என்று பிரியங்கா பேசினார்.

மேலும் அவர் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை தாக்கினார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் மீது பெரிய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும், அவர் பாஜகவில் இணைந்தபோது, ​​அந்த குற்றச்சாட்டுகள் மறைந்துவிட்டன, பாஜக வாஷிங் மெஷினுக்கு நன்றி, என்று பிரியங்கா கூறினார்.

அசாமின் துப்ரியில் உள்ள கௌரிபூரில் உள்ள கட்சி வேட்பாளர் ரகிபுல் ஹுசைனுக்காக பிரியங்கா பிரசாரம் செய்தார். இவர், சிட்டிங் எம்பி ஏஐயுடிஎப்-ன் பதுருதீன் அஜ்மல் மற்றும் பாஜக-வின் கூட்டாளியும், ஏஜிபியின் ஜாபேத் இஸ்லாம் ஆகியோருக்கு எதிராக மும்முனை போட்டியில் போட்டியிடுகிறார்.

Read in English: ‘Is being part of Modi’s political family a safety guarantee for criminals?’: Rahul, Priyanka step up attacks over Karnataka sex abuse case

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Karnataka
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment