/indian-express-tamil/media/media_files/8bY7QPPmTwt53E8T2VSE.jpg)
Karnataka Lok Sabha Polls 2024
கர்நாடகாவில் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் தாமதமாகி வருவதால் கூட்டணிக் கட்சியான பாஜக மீது மதச்சார்பற்ற ஜனதா தளம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
திங்களன்று ஜே.டி (எஸ்) அலுவலகத்தில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து, கட்சியின் மாநிலத் தலைவர் எச்.டி. குமாரசாமி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால், கட்சியின் வாய்ப்புகள் பாதிக்கப்படுவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் கருதுவதாகக் கூறினார்.
மாநிலத்தில் பிரதமர் மோடியின் சமீபத்திய பேரணிகளுக்கு அழைக்கப்படாததால் கட்சித் தலைவர்களும் ஓரங்கட்டப்பட்டதாக உணர்ந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
“நான் ஆறு அல்லது ஏழு சீட் கேட்கவில்லை. விவாதங்கள் தொடங்கியதில் இருந்து, மூன்று அல்லது நான்கு இடங்களைக் கேட்டுள்ளோம். அதை பாஜக கொடுக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இரண்டு இடங்களுக்காக, நான் அத்தகைய கூட்டணியுடன் செல்ல வேண்டுமா? என்று குமாரசாமி கேட்டார்.
மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு மூன்று இடங்களைத் தருவதாக வாக்குறுதி அளித்தாலும், அக்கட்சியின் உயர்மட்ட தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவே கவுடாவின் மருமகன் டாக்டர் சி.என்.மஞ்சுநாத்தை பெங்களூரு ரூரல் வேட்பாளராக நிறுத்தியபாஜக, இப்போது இரண்டு இடங்களை மட்டுமே பிராந்தியக் கட்சிக்கு விட்டுக்கொடுக்கப் பார்க்கிறது.
’ஹாசன், மாண்டியா மற்றும் கோலார் ஆகிய இடங்களில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம்.
இந்த கூட்டணியால் கட்சிக்கு பெரிய பலன் இல்லை என ஜே.டி.எஸ் தலைவர்கள் கருதுகின்றனர். JD(S) வாக்குகள் 18 தொகுதிகளில் குவிந்துள்ளன, அங்கு 2% அல்லது 3% வாக்குகள் அக்கட்சியை விட்டு விலகிச் சென்றால் அது பாஜகவுக்கு மட்டுமே உதவும். இதை பாஜக மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ஜேடி(எஸ்) தலைவர்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கட்சித் தலைவர்கள், என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இல்லை என்றால் பா.ஜ.க தான் விளைவுக்கு பொறுப்பாகும், நாங்கள் அல்ல’, என்று குமாரசாமி கூறினார்.
விஜயபுரா, கலபுர்கி உள்ளிட்ட சில தொகுதிகளில் பாஜகவை விட கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வலுவாக உள்ளதால், எவ்வாறு பூத் அளவில் ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது குறித்து கூட்டத்தில், ஜேடி(எஸ்) தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கட்சி வட்டாரங்களின்படி, மோடி உரையாற்றிய சமீபத்திய நிகழ்வுகளுக்கு உயர்மட்ட ஜேடி(எஸ்) தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. முதல் பேரணி சனிக்கிழமை கலபுர்கியில் நடைபெற்றது, அங்கு குமாரசாமியின் கூற்றுப்படி, பல ஆண்டுகளாக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் JD (S) இரண்டாவது இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை ஷிவமொகாவில் பிரதமரின் பேரணி நடைபெற்றது. பிரதமரின் உரைகளில் JD(S) எந்தக் குறிப்பையும் காணவில்லை.
Read in English: Tension in BJP-JD(S) alliance amid seat-sharing delay, lack of invitation to PM events
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.