Advertisment

மகளிர் 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்

33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. 454 மக்களவை எம்.பி.க்கள் ‘நாரிசக்தி வந்தன் ஆதினியம்’ மசோதாவுக்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update
modi parliament

33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

Parliament Special Session: மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா, 2023 இன் ஷரத்துக்கள் மீதான வாக்கெடுப்பு மக்களவையில் நடந்தது.

Advertisment

இதில், 454 மக்களவை எம்.பி.க்கள் ‘நாரிசக்தி வந்தன் ஆதினியம்’ மசோதாவுக்கு ஆதரவாகவும், இரண்டு பேர் பரிசீலனைக்கு எதிராகவும் உள்ளனர்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் இடஒதுக்கீடு கோட்டாவில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

காங்கிரஸ் கட்சி விவாதத்தைத் தொடங்கி, சோனியா காந்தி இந்த மசோதாவுக்கு கட்சியின் ஆதரவை வழங்கினார். ஆனால், "பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்ய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என்று கூறினார்.

Lok Sabha passes bill that will reserve one-third of seats for women in LS, Assemblies

இந்த விவாதத்தில் ராகுல் காந்தி, இது ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாத “முழுமையற்ற” மசோதா என்றும் கூறினார்.

காந்திக்குப் பிறகு அமித் ஷாவும் சபையில் உரையாற்றி, "பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படுவது புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும்" என்று கூறி மசோதாவை ஆதரித்தார்.

மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு எல்லை நிர்ணய நடவடிக்கைக்குப் பிறகுதான் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று மசோதாவில் உள்ள ஷரத்துகளை எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.

சிரோமணி அகாலி தளம் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை எடுத்துரைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Parliament
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment