லோக்சபா தேர்தலின் 6ம் கட்ட ஓட்டுப்பதிவு இன்று 7 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணிநேர நிலவரப்படி 39.48 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலான இந்தியாவின் பொதுத்தேர்தல், கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் தேர்தல் திருவிழா, தற்போது 6வது கட்டத்தை எட்டியுள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று ( மே 12) 6ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது.மதியம் 1 மணிநேர நிலவரப்படி, 39.48 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று தங்கள் ஜனநாயக கடமையை செலுத்தினர். ஏழாவது மற்றும் இறுதிகட்ட ஓட்டுப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது.