Advertisment

திரும்பப் போவதில்லை; உறுதி உடன் இருக்கும் இ.பி.எஸ்: ஓ.பி.எஸ், தினகரன் பக்கம் சென்ற பா.ஜ.க

அ.தி.மு.கவின் 2 அணிகளுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோர்ப்பது அவர்களின் அரசியலுக்கு மீண்டும் பாதையை கொடுக்கும். ஆனால் இதில் பா.ஜ.கவுக்கு என்ன லாபம்?

author-image
WebDesk
New Update
AIADMK EPS.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

முன்னாள் கூட்டணி கட்சியான அ.தி.மு.கவிடம் இருந்து சாதகமான அறிகுறிக்கான காத்திருப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து, பா.ஜ.க இப்போது அ.தி.மு.கவின் மற்ற அணி தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரனை அணுகியுள்ளது. அதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, தனது கட்சி பாஜகவுடன் மீண்டும் இணையாது என்று வெள்ளிக்கிழமை மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

இ.பி.எஸ்ஸின் இந்த அறிவிப்பு ஓ.பி.எஸ் மற்றும் ஒரு காலத்தில் அதிமுகவின் மையமாக இருந்த தினகரன் ஆகிய இருவருக்குமே நிம்மதியாக அமைந்தது. தேசியக் கட்சியின் அழைப்புக்காக ஆவலுடன் காத்திருந்தவர்கள், மாநில அரசியலின் ஓரங்களில் இருந்து மீளவும், தங்கள் அரசியல் வாழ்க்கையைப் புத்துயிர் பெறவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

கடந்த செப்டம்பரில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியதை மீண்டும் குறிப்பிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பேசிய இ.பி.எஸ், கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார். பாஜகவின் கதவுகள் அதிமுகவிற்கு இன்னும் திறந்தே உள்ளது என்று பிப்ரவரி மாதம் தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். இந்த கருத்துக்கு  பதிலளித்த இ.பி.எஸ்,  “அவர்கள் கதவுகளைத் திறந்து வைத்திருந்தால் நாங்கள் உதவ முடியாது. எனது கட்சிக்காக மட்டுமே என்னால் பேச முடியும்” என்றார். 

இந்த அப்பட்டமான நிராகரிப்புக்குப் பிறகு, வெவ்வேறு நபர்கள் மூலம் நடத்தப்பட்ட அ.தி.மு.க.வுக்கான அதன் தொடர்பை முடிவுக்குக் கொண்டுவர பா.ஜ.க தலைமை முடிவு செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. 

அ.தி.மு.க இல்லாத தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் வலுப்படுத்துவதே கட்சியின் இலக்கு என்று முடிவுக்கு வந்ததுள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், பா.ஜ.க தற்போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி ஆகியோரை அணுகி, எங்களுடன் இணைவதில் அவர்களின் ஆர்வத்தை ஒப்புக்கொண்டுள்ளது,” என்று கூறினார், வெள்ளிக்கிழமை பிற்பகலில் புதிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன என்றும் அவர் கூறினார். 

கடந்த பல நாட்களாக ஓ.பி.எஸ் தனது சொந்த ஊரான தேனியில் இருக்கிறார். அ.தி.மு.க., தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பாது என்பது தெரிந்ததையடுத்து, அவர் மீண்டும் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக, முன்னாள் துணை முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

 “இப்போது அவரது பரம எதிரியான அதிமுகவுடன் பா.ஜ.க பேரம் பேச பலமுறை முயற்சித்து வரும் நிலையில், ஓ.பி.எஸ்ஸிற்கு வாய்ப்பளிப்பதில் பாஜக தயங்கியதால் அவர் மனமுடைந்து போனார். அவர் கடந்த சில நாட்களாக வீட்டிலேயே, அடிக்கடி பிரார்த்தனைகளிலும், கோவில்களுக்குச் சென்றும், தனது குல தெய்வத்தின் சன்னதியில் ஆறுதல் தேடுவதிலும் கழித்தார்” என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் அடுத்த தமிழகப் பயணத்தின் போது, ​​மார்ச் 22-ம் தேதி என்று கூறப்படும் பயணத்தின் போது மோடி உடன் ஓபிஎஸ் மற்றும் தினகரன்  மேடையில் தோன்றுவதற்கான வாய்ப்பை வழங்கும் என பாஜகவின் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 -ம்  ஆண்டின் தொடக்கத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான வி.கே சசிகலாவின் அண்ணன் மகனான தினகரனின் அரசியல் பயணம், மத்திய அமைப்புகளின் விசாரணை உட்பட கொந்தளிப்பு மற்றும் பின்னடைவுகளால் குறிக்கப்பட்டுள்ளது. 

சசிகலா குடும்பத்தின் அரசியல் வாய்ப்புகளை அழித்தது பாஜக தான் என்றாலும், என்.டி.ஏ-வுக்குள் நுழைந்தது தினகரனுக்கு அவரது அரசியல் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக அவரது அத்தை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு சேர்த்ததாக தொடர்ந்த வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் அரசியலுக்கு வர தயங்குகிறார். 

2021-ல், மத்திய அரசின் சட்டரீதியான சவால்கள், வழக்குகள், பெரும் தொகை அபராதம், சென்னையிலுள்ள ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள அவரது பல கோடி சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்ட சவால்களால் சசிகலா சந்தித்தார். 

ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/political-pulse/aiadmk-resolute-on-not-returning-bjp-moves-on-opens-channels-with-ops-and-dhinakaran-9205963/

லோக்சபா தேர்தலில் சசிகலா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று தினகரன் ஆதரவாளர்கள் எதிர்பார்க்கும் நிலையில், பாஜக, தனது வியூகத்தை சீரமைத்துள்ள நிலையில், அ.தி.மு.க., கிளர்ச்சியாளர்களை, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கிய உறுப்பினர்களாக, உள்ளூர் செல்வாக்கை தட்டிச் செல்ல பார்க்கிறது.

குறிப்பாக சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குறைந்திருந்தாலும், இரு தலைவர்களும் ஓரளவுக்கு ஆதரவைத் தக்க வைத்துக் கொள்வதாக நம்பப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தை தொடங்க உள்ள நிலையில், ஓபிஎஸ் மற்றும் தினகரனுக்கு மொத்தம் 4 முதல் 5 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தினகரன் தேனியில் போட்டியிட முனைவார் என்றும், ஓபிஎஸ்-ன் மகன் தேனி எம்பியான பி ரவீந்திரநாத், ஓபிசி தேவர் சமூகத்தின் ஆதரவைப் பயன்படுத்தி ராமநாதபுரம் அல்லது சிவகங்கை தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் சசிகலா குடும்பத்தில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென் தமிழகத்தில் தேவர் வாக்குகளில் ஒரு காலத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா குடும்பம் ஆதிக்கம் செலுத்தியது.

அ.தி.மு.க என்ன செய்யும்?

அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, மறைந்த கேப்டன் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கிசுகிசுக்கப்பட்டாலும், அது ஆளும் தி.மு.க.வின் கூட்டணியின் பலத்துடன் இணைய முடியாது. இதன்மூலம், ராமதாஸின் பா.ம.க-வின் முடிவு முக்கியமானது.

அ.தி.மு.க பா.ம.கவிற்கு 7 தொகுதிகள் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. அதிமுக தலைவர் ஒருவர், பா.ம.க.வின் தற்போதைய பேச்சுவார்த்தை தனது கட்சியிடமிருந்து "வளங்கள்" மீதான "யாதார்த்தமற்ற" கோரிக்கைகள் மீது இருப்பதாக கூறினார்.

என்.டி.ஏ கூட்டணியில் கேபினட் இலாகாவை இலக்காகக் கொண்டு பா.ம.க பா.ஜ.கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளுடனும் கடும் பேரம் நடத்த பா.ம.க முயற்சிக்கும் அதே வேளையில், 2009, 2011, 2014 மற்றும் 2016 தேர்தல்களில் பின்னடைவைச் சந்தித்த நிலையில், தற்போது 4% வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், கூட்டணிக்கு வெளியே முத்திரை பதிக்கப் போராடும் என்பதும் தெரியும். 

2016 சட்டமன்றத் தேர்தலில் அனைத்து இடங்களையும் இழந்து கட்சியின் செயல்பாடு அன்றிலிருந்து மோசமாகி நின்ற நிலையில், 2021-ல் 5 எம்.எல்.ஏ.க்களுடன் மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால் இதுவும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததாலே சாத்தியமானது.  அதன் லோக்சபா முடிவுகள் இந்தச் சரிவை பிரதிபலிக்கின்றன, 2009-ல் ஜீரோ எம்.பி.க்கள், 2014-ல் ஒன்று மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எதுவும் இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aiadmk Tn Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment