ரயில்வே துறையில் நீண்ட காலமாக பணிக்கு வராமல், சட்ட விரோத விடுப்புகளை எடுத்து வந்த 13 ஆயிரம் பணியாளா்களை நீக்க இந்திய ரயில்வே நிர்வாகம் அதிரடியாக முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பொிய துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக தொடா்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதை சரிசெய்ய மத்திய ரயில் துறை மற்றும் நிலக்கரி துறையின் அமைச்சரான பியூஷ் கோயல் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் நீண்ட காலமாக பணிக்கு வராத பணியாளர்கள் மற்றும் சட்ட விரோத விடுப்புகளில் இருந்துக்கொண்டு ஊதியம் பெறும் பணியாளர்களின் தகவல்களை எடுக்கும்படி ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில், சுமார் 13 ஆயிரம் பணியாளர்கள் தொடர்ந்து வேலைக்கு வராமல் ஏமாற்றி வந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இவர்கள் மீது விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் பணி நீக்கம் செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய பின்பு, தகுந்த நடைமுறைகளின் படி பணி நீக்கம் செய்யப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுக்குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில். “பணிகளை சரியாக செய்யாமல், நீண்ட காலம் விடுப்பு எடுத்துள்ளவர்கள், விடுப்பு காலங்களிலும் சட்ட விரோதமாக ஊதியங்களை பெற்றவர்கள் மீது ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க உள்ளது. இந்த பணியாளர்களை கண்டறிந்து, அவர்களிடன் விசாரணை நடத்திய பின்பு ஒழுங்கு நடவடிக்கையாக அவர்களை பணியில் இருந்து நீக்க வாய்ப்புள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.