கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பிரேசிலிய பெண் ஒருவர் 7 நபர்கள் பாலியல் பலாத்காரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தின்போது தங்கள் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து தம்பதிகள் கடந்த புதன் கிழமை (ஏப்ரல் 17) யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளனர்.
பிரேசில் நாட்டை சேர்ந்த தம்பதி மோட்டார் சைக்கிளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் தும்பா மாவட்டத்தில் தங்கியிருந்தபோது, திடீரென அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்களை தாக்கி, அந்த பிரேசிலிய பெண்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார்.
முகம் முழுவதும் காயங்களுடன் இருந்த அந்த பெண், எங்களுக்கு நடந்துது வேறு யாருக்கும் நடக்க கூடாது. 7 பேர் கொண்ட கும்பல் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். என்னையும் என் கணவரையும் தாக்கிவிட்டு, எங்கள் பொருட்களை எடுத்து சென்றனர். பொருட்களை இழந்தது கூட பரவாயில்லை. அவர்கள் முதன்மை நோக்கம் என்னை பாலியல் பலாத்காரம் செய்வதாகத்தான் இருந்தது.
என் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினார்கள். இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளோம் என்று கூறியுள்ள அந்த பெண் இந்த சம்பவம் நடந்த இடத்தை பற்றியும் தெரிவித்திருந்தார். மேலும் தற்போது நாங்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். இந்த வீடியோ பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே தற்போது ஒரு யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், தம்பதி, நாங்கள் மரணத்தை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளோம் என்று உருக்கமாக தெரிவித்துள்ளனர். தங்களது வாழ்க்கையில் மிகவும் மோசமான அந்த 3 மணி நேரம் பற்றி நினைவு கூர்ந்த தம்பதி, சம்பவம் நடந்த இடத்தில் தங்குவதற்காக அங்கு வீடியோ எடுத்துள்ளனர். 59 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், அவர்கள் இடத்தைப் பார்க்கும்போது அவர்கள் சந்தித்த குற்றவாளிகளில் ஒருவர் வீடியோவில் இடம் பெற்றுள்ளார்.
தங்களுக்கு நடந்த சோகக் கதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளதாக கூறியுள்ள அவர்கள் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர உள்ளதாக கூறியிருக்கின்றனர். இந்த பிரேசிலிய ஜோடி அந்த வீடியோவில், “நாங்கள் மரணத்தை நெருக்கமாகப் பார்த்தோம். இது எங்கள் நினைவில் இருந்து நீங்காத ஒன்று. ஆனால் நமது வாழ்க்கை திட்டம் மாறக்கூடாது. துரதிர்ஷ்டத்தை எதிர்கொள்ளும் போது, நாம் எப்படி உறுதியாக எழுந்து நிற்க வேண்டும், வலுவாக இருக்க வேண்டும் மற்றும் முன்னேற வேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
மேலும் சம்பவத்தை நினைவுகூர்ந்த 63 வயதான அந்த பெண்ணின் கணவர், சம்பவம் நடந்தபோது, குற்றவாளிகள் என்னை பலமுறை கத்தியால் குத்தினர். கத்தி முனையில் என்னை பினைக்கைதியாக வைத்திருந்தனர். "என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, அவள் அங்கே புதர்களில் இருந்தாள், அப்போது அவள் இறந்துவிட்டாள் என்று நினைத்தேன். ஆனால் திடீரென்று அவள் எழுந்ததை பார்த்தவுடன், எனக்கு இதுவரை நினைத்துக்கூட பார்க்க முடியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அவளைப் பாதுகாக்க என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. சம்பத்தில் ஈடுபட்டவர்கள் எங்களிடம் இருந்து எதையும் எடுக்கவில்லை, அவர்கள் விரும்பியதெல்லாம் அவளை கற்பழிக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்,
இந்த சம்பவத்திற்கு பிறகு தம்பதி மருத்துவமனைக்குச் சென்றபோது, சில சோதனைகளுக்குப் பிறகு, கொசுக்கள் நிறைந்த அறைக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த மறையில் ஜன்னல்கள் உடைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அறையில் என்ன நடக்கிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. காவல்துறை அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளப் போகிறதா? அல்லது இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே எல்லாவற்றையும் பதிவு செய்ய முடிவு செய்தோம், ”என்று தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.