ரஷ்ய படையெடுப்பு காரணமாக, உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள், படிப்பை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருவதால மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதுகுறித்து தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வில் பேசிய அட்டர்னி ஜெனரல் கே கே வேணுகோபால், "மாணவர்கள் இந்த விஷயத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். மத்திய அரசு பரிசீலித்து, மாணவர்களின் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதுதவிர, நீதிபதி கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றவும், அவர்களது எம்.பி.பி.எஸ் பட்டங்களை இந்தியாவில் அங்கீகரிக்க கோரிய மனுவையும் விசாரித்தது.
அப்போது பதிலளித்த அட்டர்னி ஜெனரல், போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் உள்ள மாணவர்களை வெளியேற்றும் "மகத்தான" பணியை அரசாங்கம் முடித்துவிட்டது. சுமார் 22,500 மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்ற நாட்டினரும், மீட்பு பணியின் போது அழைத்து வரப்பட்டனர். மிகப்பெரிய பணி நிறைவடைந்தது என்றார்.
அட்டர்னி ஜெனரல் பதிலை பதிவு செய்த நீதிபதி அமர்வு, அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது கூறுகையில், "படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க பிரார்த்தனை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அட்டர்னி ஜெனரல் உறுதியளித்துள்ளார்" என்றது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil