பகவான் ராமர் முதல் மஹா விகாஸ் அகாடி (MVA) அரசாங்கம் வரை, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) இரு குழுக்களும் புதன்கிழமை மாறிமாறி குற்றம்சாட்டி முட்டிக் கொண்டனர்.
எதிர்க்கட்சியான என்.சி.பி. எம்.எல்.ஏ. ஜிதேந்திரா அவாத் ஷீரடியில் நடந்த கட்சியின் ஆய்வு முகாமில் கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் பேசும் போது, "பகவான் ராமர் பகுஜன்களின் ராஜா மற்றும் அசைவ உணவு உண்பவர்" என்று கூறி சலசலப்பைத் தொடங்கினார்.
“நாங்கள் வரலாற்றைப் படித்துவிட்டு அரசியலில் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. ராமர் நம்முடையவர். எங்களில் பகுஜன்கள் உண்பதற்காக வேட்டையாடுபவர்கள்... ராமர் ஒருபோதும் சைவ உணவு உண்பவர் அல்ல. அவர் அசைவம் சாப்பிடுபவர். 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்தவர் எப்படி சைவ உணவு உண்பவராக இருக்க முடியும்” என்று அவர் கேட்டார்.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் ஜனவரி 22-ஆம் தேதியை உலர் நாளாக அறிவிக்க வேண்டும் என்றும், அசைவ உணவுகளுக்கு ஒரு நாள் தடை விதிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளும் பாஜக எம்எல்ஏ ராம் கதம் கடிதம் எழுதிய நேரம், அவாத்தின் அறிக்கை வந்தது.
கோடான கோடி ராமர் பக்தர்களின் உணர்வுகளை அவமதித்தவர் என்று கூறி, பாஜக அவாத்தை உடனே குறிவைத்தது.
”ராமர் அசைவ உணவு சாப்பிட்டார் என்பதற்கு ஜிதேந்திரா அவாத் என்ன ஆதாரம் வைத்துள்ளார்? அவர் அதைப் பார்த்தாரா? கோவில் திறக்கப்படும் நேரத்தில், அவர் ராமரின் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்ச்சிகளை அவமதித்துள்ளார், ”என்று கதம் கூறினார்.
ஆளும் என்சிபியின் மாநிலத் தலைவர் சுனில் தட்கரே, "அவர் அளவுக்கு எனக்கு ஞானம் இல்லை, அதைப் பற்றி பேசாமல் இருப்பது நல்லது" என்று அவாத்தை கேலி செய்தார்.
இதனிடையே தான் சர்ச்சைக்குரியதாக எதுவும் கூறவில்லை என்று அவாத் கூறினார்.
“எனது கூற்றுகள் உண்மையாக இருந்தன. ராமரை சைவ உணவு உண்பவராக மாற்ற திட்டமிட்ட முயற்சி நடந்து வருகிறது. இந்த நாட்டில் 80% க்கும் அதிகமான மக்கள் அசைவ உணவு உண்பவர்கள், அவர்கள் ராமரின் பக்தர்கள், ”என்றார்.
துணை முதல்வர் அஜித் பவாரை குறிவைத்த அவாத், 2019 ஆம் ஆண்டு அதிகாலை பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸுடன் பதவியேற்றபோதும் அவரை எம்.வி.ஏ அரசாங்கத்தில் துணை முதல்வராக்கியது தவறு என்று கூறினார்.
அவரை மீண்டும் துணை முதல்வராக்கியது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தவறு. ஷரத் பவாருக்கு விசுவாசமாக இருந்தவர்களை அவர் எல்லா இடங்களிலும் அவமதித்தார், என்று அவாத் கூறினார்.
இதற்கு உடனே பதிலளித்த தட்கரே, மஹா விகாஸ் அகாடி அரசாங்கத்தில் அஜித் பவார் துணை முதல்வராக ஆகவில்லை என்றால், அது உடனே சரிந்திருக்கும் என்றார்.
Read in English: Lord Ram was king of Bahujans… was non-vegetarian, says Jitendra Awhad; sparks war of words
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.