கோவிட்-9 தொடர்பான திருத்தியமைக்கப்பட்ட மருத்துவ மேலாண்மை விதிமுறைகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டது. ரெம்டெசிவைர்,டோசிலிசுமாப், கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி போன்ற சிகிச்சை முறைக்கு இந்த விதிமுறைகளில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த விதிமுறையில் முக்கியமானதாக, திடீரென சுவை மற்றும் வாசனை இழப்பை கொரோனா தொற்றுக்கான அறிகுறி என்று மத்திய அரசு தெரிவித்தது. இதன் மூலம், சுவை, வாசனை இழந்தோர் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை வரம்புக்குள் கொண்டு வரப்படுவார்கள்
ஆன்டிவைரல் பண்புகளைக் கொண்ட ரெம்டெசிவைர் மருந்து, 2014 ஆம் ஆண்டில் எபோலா நோய்க்கான சிகிச்சை மருந்தாக அமெரிக்காவைச் சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. கொரோனா வைரஸ்களின் குடும்பத்தை சேர்ந்த மெர்ஸ், சார்ஸ் போன்ற நோய்களிக்கும் இது முயற்சிக்கப்பட்டது.
ஆட்டோ - இம்யூன்' கோளாறுகள் போன்ற நோய்களுக்கு சிகிச்சை மருந்தாக டோசிலிசுமாப் செயல்படுகிறது.
ஏற்கெனவே நோயுற்று குணமடைந்தவரின் உடலில் உருவாகியிருக்கும் நோய் எதிர்ப்பாற்றலை ப் பயன்படுத்திக் கொள்ளும் நடைமுறையை ``கன்வலசன்ட்-பிளாஸ்மா தெரபி'' சிகிச்சை என்றழைக்கப்படுகிறது. கன்வலசன்ட் சீரம், அதாவது கோவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகி குணமடைந்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளவரின் ரத்தத்தில் இருந்து பிரிக்கப்பட்ட இந்த அணுக்கள், கோவிட்-19 பாதித்த நோயாளிக்கு செலுத்தப்படுகிறது.
இதற்கிடையே, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் வைரஸ் பெருக்கைக் குறைப்பதற்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ)மருந்து தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆண்டிபயாடிக் அஜித்ரோமைசின், இனி கொரோனா சிகிச்சை முறையின் ஒரு பகுதியாக இருக்காது என்றும் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சுகாதார தகவல் தளம் (ஐ.எச்.ஐ.பி) மற்றும் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) போர்டல் மூலம், 11.06.2020 தேதியன்று பெறப்ப்பட்ட கோவிட்-19 (n = 15,366) தொற்று பரவல் தரவுகள் அடிப்படையில், காய்ச்சல் (27%), இருமல் (21%), தொண்டை வழி(10%), மூச்சுத் திணறல் (8%), பலவீனம் (7%), ஒழுகும் மூக்கு (3) %) மற்ற அறிகுறிகள் 24%.” போன்ற விகிதத்தில் கொரோனா அறிகுறிகள் பதிவு செய்யப்பட்டதாக இன்று வெளியிடப்பட்ட கோவிட்-9 தொடர்பான மருத்துவ மேலாண்மை விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
லேசான, மிதமான, தீவிரமான நிலைமை என்று கோவிட்-19 நோயாளிகளை வகை பிரித்து, அதற்கேற்ப மருத்துவ மேலாண்மை மேற்கொள்வதற்கு இந்தப் புதிய விதிமுறை வழிசெய்கிறது. நோயின் மூன்று கட்டத் தன்மைகளைப் பொறுத்து, நோய்த்தொற்று வராமல் தடுப்பது, கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஆகியவை குறித்தும் இந்த விதிமுறைகள் கூறுகின்றன.