"இன்று பல நாடுகள் அமெரிக்காவைப் பார்த்து பதற்றமாக இருப்பது எனக்குத் தெரியும். அது நேர்மையாக இருக்கட்டும். ஆனால் இந்தியாவிற்கு பதற்றம் இல்லை” என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு டொனால்ட் டிரம்ப்பிற்கு தொலைப்பேசியில் அழைத்த மூன்று நபர்களில் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என்றும் அவர் கூறினார்.
மும்பையில் ஆதித்ய பிர்லா உதவித்தொகை திட்டத்தின் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், அரசியல் தத்துவஞானியுமான மைக்கேல் ஜே. சாண்டல் மற்றும் ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா ஆகியோரும் உடனிருந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவு இந்திய-அமெரிக்க உறவுகளை பாதிக்குமா என்று கேட்டதற்கு, ஜெய்சங்கர் பதிலளிக்கையில், “பிரதமர் மோடி உண்மையில் அமெரிக்காவின் பல அதிபர்களுக்கு இடையே நல்லுறவை உருவாக்கியுள்ளார்... அந்த உறவுகளை அவர் எ இயற்கையாகவே உருவாக்கி உள்ளார். ”
இந்தியாவின் கதையை உலகம் அதிகளவில் பாராட்டி வருவதாகக் கூறிய அவர், பொருளாதாரக் கொள்கையில் கவனம் செலுத்துவது உண்மையில் சமகாலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய மாற்றமாக மாறியுள்ளது, இது தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமின்றி தேசிய வளர்ச்சியை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
"உலக நாடுகள் இனி ஒருவரையொருவர் இராணுவ திறன்கள் அல்லது அரசியல் செல்வாக்கால் அளவிடப் போவதில்லை. மாறாக தொழில்நுட்ப பலம், பொருளாதார வளர்ச்சி, மனித படைப்பாற்றல் மற்றும் சமூக நல்வாழ்வை கணக்கில் எடுத்துக்கொள்கிறோம்.
எந்த ஒரு தேசமும் உண்மையில் ஒரே பரிமாணத்தில் வளர்ச்சி அடைய முடியாது. பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகள், குறிப்பாக நம்மைப் போன்றவர்கள் சில அடிப்படை தன்னிறைவு பெற்றிருக்க வேண்டும்,” என்று அவர் ஆத்மநிர்பர் பாரதத்தை வலியுறுத்தி பேசினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“