இந்தியாவில் அதிரடியாக குறைந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை : மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LPG cylinder,LPG cylinder price, non-subsidy gas price, chennai, delhi, kolkata, mumbai, price slash
LPG cylinder,LPG cylinder price, non-subsidy gas price, chennai, delhi, kolkata, mumbai, price slash

இந்தியாவில், மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 2 மாதங்களில் தொடர்ந்து இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/9H-6xsWJMLQ

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

இந்தியாவில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை, எரிபொருள் நிறுவனங்கள், மாதத்திற்கு ஒருமுறை மாற்றியமைத்து வருகின்றன. சர்வதேச சந்தையின் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை மற்றும் இந்திய ரூபாய் – அமெரிக்க டாலர் பரிமாற்ற மதிப்பு இவற்றின் அடிப்படையில், இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

மானியம் இல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை கடந்த மார்ச் மாதம் 26 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதும் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது.

டில்லி

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 744 ( மார்ச் மாத விலை ரூ. 805)

மும்பை

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 714.50 ( மார்ச் மாத விலை ரூ. 776.50)

கோல்கட்டா

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 774.50 ( மார்ச் மாத விலை ரூ. 839.50)

சென்னை

கேஸ் சிலிண்டர் விலை ரூ. 761.50 ( மார்ச் மாத விலை ரூ. 776.50)

மக்களுக்கு மாதம் ஒரு சிலிண்டர் வீதம் ஆண்டிற்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில், வழங்கப்பட்டு வருகின்றன. அதனை தவிர்த்து சிலிண்டர்கள் தேவைப்படுவோருக்கு மானியமில்லாத சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மானியமில்லாத சிலிண்டர்களின் விலை மார்ச் மாதத்தை தொடர்ந்து இந்த மாதமும் குறைக்கப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lpg cylinderlpg cylinder price non subsidy gas price chennai delhi kolkata mumbai price slash

Next Story
விடை பெற்ற தாய்; உடலை தொடக்கூட தயங்கினார்கள்Poes Garden, Teynampet, Jothi Kannagi Nagar , man slept in parkiing area killed ,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com