சென்னையில் சிலிண்டர் விலை உயர்வு!

மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.49.50 அதிகரித்து தற்போது 734 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட வருகிறது. இந்நிலையில் மக்களின் அடிப்படை தேவையான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. சர்வதேச நிலவரத்தின் படி சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.

மத்திய அரசு வர்த்தக சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதில்லை. இதன்விலையை மாதந்தோறும் எண்ணெய் நிறுவன கூட்டமைப்பு நிர்ணயம் முடிவு செய்து அறிவிக்கிறது.

இதன்படி, வர்த்தக சிலிண்டர் தற்போது 78 ரூபாய் அதிகரித்து 1,302 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 1,143 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல, வீட்டு உபயோகத்துக்கான மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.49.50 அதிகரித்து தற்போது 734 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த சிலிண்டரின் விலை 684.50 ரூபாய்க்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close