மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நேற்று (ஏப்.26) வெள்ளிக் கிழமை நிறைவடைந்தது. கேரளா, கர்நாடகாக உள்பட நாடு முழுவதும் உள்ள 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரவு 10 மணி வரையிலான நிலவரப்படி முதல் கட்ட வாக்குப் பதிவை போலவே வாக்கு சதவீதம் சரிந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கூற்றுப் படிநேற்று இரவு நிலவரப்படி மொத்தம் 64% வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. எனினும் இது சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வாக்குப் பதிவு முடியும் நேரமான மாலை 6 மணிக்கு மேலும் ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருந்ததால் மொத்த வாக்கு சதவீதம் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப் பதிவு மையத்திற்கு 6 மணிக்கு முன் வருபவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
2019-ம் ஆண்டில், வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடந்த 88 தொகுதிகளில் 85-ல் 69.64% வாக்குகள் பதிவாகியிருந்தன. கடந்த ஆண்டு எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு இருக்கை எல்லைகள் மாறியதால், அசாமின் 5 இடங்களுக்கான வாக்குப் பதிவு ஒப்பீடு கடினமாக உள்ளது.
ஏப்ரல் 19 அன்று 102 இடங்களுக்கான முதல் கட்ட வாக்கெடுப்பின் நாள் முடிவில் தோராயமாக 63% வாக்குகள் பதிவாகி இருந்தது. பின்னர் மறுநாள் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி இது 66% ஆக இருந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், முக்கியமாக மூன்று மாநிலங்களில் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் மந்தமான வாக்களிப்பு நடைபெற்றது. இதுவே ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தைக் குறைத்துள்ளது என்று சுட்டிக்காட்டினர். வெள்ளிக்கிழமை இரவு வரை, மகாராஷ்டிராவில் 59.6%, பீகாரில் 57% மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 54.8%, முறையே இந்த சதவீதம் 2919-ல் 63%, 63% மற்றும் 62% ஆக பதிவாகியிருந்தன.
இந்த 88 இடங்களில் மொத்தம் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். இரண்டாம் கட்டத்துடன், மொத்தமுள்ள 543 இடங்களில் மூன்றில் ஒரு பகுதிக்கான வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவ்விரு கட்டத்துடன் தொத்தம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது. ராஜஸ்தான், கேரளா, திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது
முதல் கட்ட வாக்குப் பதிவில் 12 இடங்களிலும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் 13 இடங்களிலும் ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற்றது. இரவு 11 மணியளவில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 64.07% ஆக இருந்தது, அதே நேரத்தில் 2019-ல் அதே இடங்களில் 68% வாக்குகள் பதிவாகியிருந்தன.
கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் நேற்று வெள்ளிக் கிழமை ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இரவு 11 மணியளவு ஒப்பீட்டில் 67.15% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 2019-ல் 78% வாக்குகள் பதிவாகியிருந்தன.
28 தொகுதிகளில் பாதியைக் கொண்ட கர்நாடகாவில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி நிலவரப்படி 68.38% வாக்குகள் பதிவாகின, அதே 14 தொகுதிகளில் 2019-ல் 67% வாக்குகள் பதிவாகியிருந்தன. மாநிலத்தின் மீதமுள்ள 14 தொகுதிகள் மூன்றாவது இடத்தில் வாக்களிக்கும். வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்ற திரிபுராவில் 2019-ல் 82.9% ஆக இருந்த ஒரே தொகுதியில் 79.59% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/elections/ls-poll-phase-2-another-dip-64-turnout-sluggish-in-maharashtra-bihar-up-voting-ends-in-kerala-rajasthan-9293003/
வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடந்ததாகவும், வன்முறை குறித்து எந்த புகாரும் இல்லை என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இரண்டாம் கட்ட தேர்தல் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். X பதிவில் அவர் கூறுகையில், “இரண்டாம் கட்டம் மிகவும் நன்றாக உள்ளது! இன்று வாக்களித்த இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு நன்றி. என்.டி.ஏ.வுக்கு கிடைத்த இணையற்ற ஆதரவு எதிர்க்கட்சிகளை மேலும் ஏமாற்றப் போகிறது. வாக்காளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை விரும்புகிறார்கள். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் வலுவான NDA ஆதரவை வலுப்படுத்துகிறார்கள் என்றார்.
7 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 102 தொகுதிகளுடன் முதல் கட்ட வாக்குப் பதிவுடன் தொடங்கியது. தேர்தல் ஆணையம் இன்னும் இறுதி வாக்குப்பதிவு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை என்றாலும், அந்த இடங்களில் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு 66% என மதிப்பிடப்பட்டுள்ளது, 2019-ம் ஆண்டு இதே தொகுதிகளில் வாக்குப் பதிவு சதவீதத்தை விட நான்கு சதவீத புள்ளிகள் குறைவாக இருக்கும்.
முதல் கட்டத்திற்குப் பிறகு, வானிலை நிலையை மதிப்பிடுவதற்கும் வெப்ப அலையின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் தேர்தல் ஆணையம் ஒரு கூட்டத்தை நடத்தியது. இரண்டாம் கட்டத்திற்கான வெப்ப அலை எச்சரிக்கை எதுவும் இல்லை என தேர்தல் குழு தெரிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.