scorecardresearch

சென்னை- புதுச்சேரி- கடலூர் புதிய ரயில் பாதை திட்டம்; துணை நிலை ஆளுநர் தமிழிசை வரவேற்பு

சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளாா்.

Lt Governor Tamilisai welcomes, Chennai-Puducherry-Cudalore New Railway Project, சென்னை-புதுச்சேரி-கடலூர் புதிய ரயில் பாதை திட்டம்; துணை நிலை ஆளுநர் தமிழிசை வரவேற்பு

சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்றுள்ளாா்.

சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி வழியாக கடலூா் வரையிலான புதிய ரயில் பாதை திட்டத்துக்கு, மத்திய நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறியிருப்பதாவது: “புதுச்சேரி, தமிழக மக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பான சென்னை – புதுச்சேரி- கடலூா் இடையிலான ரயில் சேவையை தொடங்கக்கோரி மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் ராவ் சாகப் பாட்டீல் தான்வி ஆகியோருக்கு அண்மையில் கோரிக்கைக் கடிதம் அளித்தேன். அதையேற்று, ரயில் பாதைப் பணியை தொடங்க நிதி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக பிரதமா் நரேந்திர மோடி, மத்திய ரயில்வே அமைச்சா் மற்றும் ரயில்வே இணையமைச்சா் ஆகியோருக்கும் நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளாா்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Lt governor tamilisai welcomes chennai puducherry cudalore new railway project

Best of Express