விடுதலைப் புலிகள் மீதான தடை 2024 வரை நீட்டிப்பு…

இந்தியாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்து வருகிறது.

LTTE Ban Home Affairs Ministry Notification
LTTE Ban Home Affairs Ministry Notification

LTTE Ban Home Affairs Ministry Notification : விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் விடுதலை புலிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்று மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை

LTTE Ban Home Affairs Ministry Notification

 

மேலும் படிக்க : விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் : ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகம் வந்த போது விடுதலைப் புலிகள் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டார். 1991ம் ஆண்டு நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிறகு இந்தியாவில் விடுதலைப் புலிகளின் அமைப்பிற்கும், செயல்பாட்டிற்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் இடையே, தமிழீழம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலியினர் வீழ்த்தப்பட்டனர். அவ்வியக்கம் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு கூறிவருகிறது.

இருப்பினும் தமிழ் ஈழத்தினை உருவாக்கும் எண்ணத்தில் வெளிநாட்டில் சிலர் அமைப்பாக இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டமைப்பதாகவும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கான ஆதரவு தொடந்து அதிகரித்து வருவதாகவும், தடை செய்யபப்ட்ட இயக்கத்திற்கு தமிழ் மக்கள் தொடர்ந்து ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 28 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் மீதான தடை நீடித்து வருகிறது. 2006ம் ஆண்டு தடை விதித்த ஐரோப்பிய யூனியன் “விடுதலைப் புலிகள் இயக்கமானது பயங்கரவாத இயக்கம் இல்லை என்றும் அதன் மீதான தடை நீக்கப்படுகிறது” என்றும் ஜூலை 2017ல் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ltte ban home affairs ministry notification says ban will continue till

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express