லக்னோவில் ஈவ்-டீசிங் செய்தவரை தட்டிக்கேட்ட பெண் காவலர் மீது தாக்குதல்

Lucknow woman police constable injured attack by male harasser: உத்திரபிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்த நபரை தட்டிக்கேட்ட பெண் காவலர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்திரபிரதேசத்தில் ஈவ் டீசிங் செய்த நபரை தட்டிக்கேட்ட பெண் காவலர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ரோந்து சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பிரபாத் குமார் என்பவர் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண் காவலர் எதிர்த்து கேள்வி கேட்டபோது பிரபாத் குமார் அவரைத் தாக்கியுள்ளார்.

பெண் காவலரை பிரபாத் குமார் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பெண் காவலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண் காவலரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பிரபாத் குமாரை அருகில் இருந்தவர்கள் துரத்தி பிடித்துள்ளனர். பெண் காவலரை தாக்கியதாக அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பகுதியை சேர்ந்த பிரபாத் குமார் என்பவர் மீது கொலை முயற்சி, ஈவ்-டீசிங் மற்றும் பொது ஊழியரை கடுமையாக காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Lucknow woman police constable injured attack by male harasser

Next Story
இந்தியா முக்கியமான நாடு, உறவுகளை பேண விரும்புகிறோம்; தாலிபான் தலைமை அறிக்கை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com