Lunar Eclipse 2019: 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வ சந்திர கிரகணம், இன்று(ஜூலை 17) நிகழ்ந்தது. இதை, இந்தியாவில், வெறும் கண்களால் பார்க்க முடிந்தது.
சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது.
சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, நிலவு இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது ஏற்படும் நிகழ்வாகும். இந்நிகழ்வின் போது பூமியின் நிழல், நிலவின் மீது விழும் இதனால் நிலவின் மீது சூரிய வெளிச்சம் படாது.சூரியன் வெளிச்சம் இல்லாததால் அந்த நேரத்தில் நிலவு தெரியாது. பூமியின் நிழல் விழ விழ நிலவு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டே இருக்கும். பின்னர் எப்போது பூமி ஒரே நேர் கோட்டிலிருந்து விலக துவங்குகிறதோ, அப்போது மீண்டும் சிறிது சிறிதாக நிலவு, சூரிய வெளிச்சம் காரணமாக தெரிய துவங்கும். இந்நிலையில் இன்று நிகழ்ந்த சந்திர கிரகணத்தின் போது, பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைத்தது. சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல், பகுதியளவு நேர்கோடாக வந்ததால் பாதி சந்திர கிரகணம் நிகழ்ந்தது.
இதன்படி, பூரண சந்திரகிரகணம் நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்கியது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிந்தது. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென்அமெரிக்கா உள்ளிட்ட பல இடங்களில் இந்த சந்திர கிரகணத்தை வெறும் மக்கள் பார்க்க முடிந்தது. சந்திர கிரகணத்தை காண பிர்லா கோளரங்கிலும் புதுவை அப்துல் கலாம் கோளரங்கத்திலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன
இந்தியாவில் 2021ம் ஆண்டுதான் அடுத்த முழுமையான கிரகணம் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது.