இன்று முழு சந்திர கிரகணம் : தமிழக கோவில்கள் நடை சாத்தப்பட்டன.

ஒவ்வொரு சந்திர கிரகணத்தின் போதும் , கோவில்கள் அதிகாலையே நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டு, மதியம் நடை சாத்தப்படுகின்றன.

இன்னும் சற்று நேரத்தில்  முழு சந்திர கிரகணம் தோன்ற இருப்பதால் கோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டன.

சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் போது, சந்திர கிரகணம் உண்டாகிறது. இன்று நிகழ இருக்கும் இந்த முழு சந்திர கிரகணத்தில் நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும் இன்று மாலை, 5:25க்கு தொடங்கும் இந்த சந்திர கிரணம் இரவு 7:25 மணி வரை நீடிக்கிறது.

இதனால் பெரும்பாலான கோவில்கள் நடை சாத்தப்பட்டன. வழக்கமாக தைப்பூசத் தேர்த்திருவிழா, மாலையில் நடப்பதற்கு பதிலாக இன்று காலையிலேயே நடந்து முடிந்தது. ஒவ்வொரு சந்திர கிரகணத்தின் போதும், கோவில்கள் அதிகாலையே நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தி முடிக்கப்பட்டு, மதியம் நடை சாத்தப்படுகின்றன.

பின்பு, சந்திர கிரகணம் நிறைவடைந்ததும், கோவில்கள் தண்ணீரால் தூய்மைப்படுத்தப்பட்டு, பூஜைகள், பரிகாரங்கள் ஆகியவை செய்யப்பட்ட பிறகே, நடை திறக்கப்படுகின்றன. இன்று வானில் தோன்ற இருக்கும் சந்திர கிரகணம் காரணமாக திருப்பதி கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களின் நடைகள் சாத்தப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு கோவில் முன்பாக போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் தெரியும் இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்ணளாலே பார்க்கலாம என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளது.

×Close
×Close