Madhya Pradesh, BJP objects to sale of chicken and milk: மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசு சார்பில் அறிமுகப்படுத்தியுள்ள, பால், முட்டை கோழி இறைச்சி விற்பனை செய்யும் திட்டத்தில், ஒரே இடத்தில் பால், கோழி இறைச்சி விற்பனை செய்வது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் என்று பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அனைத்து மக்களுக்கும் முட்டை, பால் மற்றும் கோழி இறைச்சி உள்ளிட்ட சத்துணவு கிடைக்க வேண்டும் என்று அரசு சார்பில் சிக்கன், முட்டை, பால் விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் கோழி இறைச்சி மற்றும் பால் விற்பனை செய்வது இந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜாபுவா மற்றும் அலிராஜ்பூர் மாவட்டங்களில் பழங்குடிப் பெண்களின் கூட்டுறவு நிறுவனங்களால் வளர்க்கப்படும் புரதச்சத்து நிறைந்த கோழி இனமான கடக்நாத்துக்கு ஒரு சந்தையை வழங்குவதற்காக, போபாலில் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய பிரதேச கால்நடை மற்றும் கோழி மேம்பாட்டுக் கழகம் (எம்.பி.எல்.பி.டி.சி) ஒரு விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. கால்நடை வளர்ப்பு மற்றும் கூட்டுறவுத் துறைகளின் நோக்கங்களை ஒன்றிணைப்பதற்காகவும் இந்த திட்டத்தை சந்தைப்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ள இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. ராமேஷ்வர் சர்மா முதலமைச்சர் கமல்நாத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “இந்து மதம், சமண மதம், பௌத்தம் மற்றும் சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு பசும் பால் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தூய்மையின் சின்னமாக கடவுளுக்கு வழங்கப்படுகிறது. அது மேலும் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதனால், கோழி மற்றும் மாட்டு பால் விற்பனையை ஒரே இடத்திலிருந்து விற்பனை செய்வதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். துர்கா பூஜை திருவிழா துவங்குவதற்கு முன்பு கோழி மற்றும் மாட்டு பால் விற்பனையை தனியாக சற்று தொலைவில் உள்ள பார்லர்களில் விற்பனை செய்வதை உறுதி செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.எல்.பி.டி.சி நிர்வாக இயக்குனர் டாக்டர் எச்.எம்.எஸ். பதோரியா தி சண்டே எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் கூறுகையில், “பெண்கள் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து ஒரு பெரிய சந்தை மற்றும் சிறந்த விலையை அணுகுவதை உறுதி செய்வதற்கு இணைப்பை வழங்குவதற்காக அரசாங்கக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த விற்பனை நிலையம் திறக்கப்பட்டது. கோழி மற்றும் மாட்டு பால் அருகிலுள்ள பார்லர்களில் தனித்தனி ஃபீரிஜர்களில் சேமிக்கப்படுகின்றன. மேலும், அதன் விற்பனையாளர்கள் கூட வேறுபட்டவர்கள். அங்கிருந்து தயாரிப்புகளை வாங்கும் யாருக்கும் சேர்த்து விற்பனை செய்யப்படாது” என்று கூறினார்.
மேலும், போபாலுக்கு அருகிலுள்ள தொழில்துறை டவுன்ஷிப்பான மண்டிடிப்பில் கோழிகள் சுத்தம் செய்யப்பட்டு சமைக்கத் தயாராக மாநிலத்தில் உள்ள விற்பனை நிலையங்களுக்கு கொண்டுவரப்படுகிறது என்று கூறிய அவர் போபாலின் புறநகரில் உள்ள இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் பால் பண்ணையிலிருந்து பால் கொண்டு வரப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், இரண்டு தயாரிப்புகளுக்கும் இடையில் கடினமான தனித்தனியான பகிர்வு இருப்பதால் பாஜகவின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கால்நடை பராமரிப்பு அமைச்சர் லகன் சிங் யாதவ் கூறினார். மக்களின் வசதிக்காக ஒரே இடத்தில் இருந்து கோழி மற்றும் பால் விற்கப்படுகின்றன என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.