மத்தியப் பிரதேச ஆளுனர் லால்ஜி டாண்டன் இன்று அதிகாலை காலமானார்.வயது 85.
அவரது மகன் அசுதோஷ் டாண்டன் ட்விட்டரில் “பாபுஜி நஹி ரஹே (என் தந்தை காலமானார்)” என்ற இறப்பு செய்தியை தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்தார்.
சுவாசப் பிரச்சினைகள், சிறுநீர் கழிப்பதில் சிரமம்,காய்ச்சல் போன்ற காரணங்களால் டாண்டன் கடந்த ஜூன் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 11 அன்று வென்டிலேட்டர் அவருக்கு பொருத்தப்பட்டது. லக்னோவில் உள்ள மேடந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, உடல்நிலை 'மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படட்து .
இந்த செய்தியை அறிந்து தாம் மனவேதனை அடைந்ததாகவும், இந்த நேரத்தில் 'சமூகத்திற்கு சேவை செய்யும் பொருட்டு டாண்டன் மேற்கொண்ட அயராத முயற்சிகளை' நினைவு கூறுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தெரிவித்தார்.
21, 2020
"உத்தரபிரதேசத்தில் பாஜக கட்சியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். திறமையான நிர்வாகி என்று பெயர் பெற்றார். எப்போதும் பொது நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்தார், ”என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும்,ஸ்ரீ லால்ஜி டாண்டன் அரசியலமைப்பு விஷயங்களை நன்கு அறிந்தவர். அவர் அடல் ஜியுடன் நீண்ட மற்றும் நெருக்கமான தொடர்பை அனுபவித்தார், என்றும் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு லக்னோவில் உள்ள குலாலா காட் சவுக்-ல் நடைபெறும் என்று அசுதோஷ் கூறினார்.
21, 2020
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பொதுமக்கள் வீட்டிலிருந்து மரியாதை செலுத்த வேண்டும் என்றுஅசுதோஷ் டாண்டன் கேட்டுக்கொண்டார். ட்விட்டரில் “கொரோனா வைரஸ் தொற்றுநோயை மனதில் கொண்டு, நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளையும் விதிகளையும் பின்பற்றி, உங்கள் சொந்த வீடுகளிலிருந்து தந்தைக்கு அஞ்சலிகளை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இது சமூக தூரத்தை பராமரிக்கவும் உதவும் ”என்று பதிவிட்டுளார் .
ஐந்து தசாப்தங்களாக நீடித்த அரசியல் வாழ்க்கையில், டாண்டன் 1978-1984 ,1990-1996 என இரண்டு முறை உத்தரப் பிரதேசம் சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தார்; 1996 - 2009 ஆகிய காலங்களில் மூன்று முறை உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்; பதினைந்தாவது மக்களவை காலத்தில்( 2009- 2014) பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பீகார் , மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆளுனராகவும் பணி புரிந்தார்.