மத்தியப் பிரதேச மாநில அரசு தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. துணை முதல்வராக பதவி வகித்து வந்த ஜோதிராதித்ய சிந்தியா 10ம் தேதி அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைப்போம் என்று அம்மாநில முதல்வர் கமல்நாத் அறிவித்துள்ளார்.
Advertisment
எதன் நம்பிக்கையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போகின்றீர்கள் என்றதற்கு “ஹோலி அன்று தங்களின் பதவிகளை ராஜினிமா செய்த 22 எம்.எல்.ஏக்கள் சிலரிடம்பேசி வருவதாகவும், எம்.எல்.ஏ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்தவுடன் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்றும்” கூறியுள்ளார். எம்.எல்.ஏக்கள் ஏன் போபாலுக்கு வரவில்லை. அவர்கள் ஏன் நேரில் வந்து தங்களின் ராஜினாமாவைத் தரவில்லை. அவர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் ராஜினாமா அளித்தார்களா என்பதையெல்லாம் யோசிக்க வேண்டும். அவர்களை அடைத்து வைக்கவில்லை என்றால் இந்நேரத்தில் அவர்கள் அனைவரும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
பாஜக எப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தன் பக்கள் இழுத்துக் கொள்கிறது என்பது குறித்து நானும் ஜோதிராதித்ய சிந்தியாவும் பேசிக் கொண்டிருந்தோம். 10 நாட்களுக்கு முன்பு நான் அவரை டெல்லியில் சந்தித்த போதும் இது குறித்து நான் பேசினேன். கடந்த சனிக்கிழமை வரை நான் அவருடன் தொடர்பில் இருந்தேன் என்றும் முதல்வர் கூறினார்.