பிரசவ வலியால் துடித்த பெண்; தள்ளு வண்டியில் கொண்டு சென்ற கணவன்: திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் பிறந்த குழந்தை மரணம்

மத்தியப் பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அனுமதிக்காமல் இரண்டு முறை திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் வழியிலே பிறந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மத்தியப் பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அனுமதிக்காமல் இரண்டு முறை திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் வழியிலே பிறந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

author-image
WebDesk
New Update
Madhya Pradesh husband carries pregnant Woman on handcart hospital newborn dies Tamil News

மத்தியப் பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை அனுமதிக்காமல் இரண்டு முறை திருப்பி அனுப்பிய மருத்துவமனையால் வழியிலே பிறந்த குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள சைலானா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணா குவாலா. கர்ப்பிணியான இவரது மனைவிக்கு மார்ச் 23 அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் தனது மனைவியை அருகில் இருந்த சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisment

அப்போது பரிசோதனை செய்த மருத்துவமனை ஊழியர்கள், அவரது மனைவிக்கு இப்போது பிரசவம் இல்லை என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், வீட்டிற்கு சென்ற கிருஷ்ணா குவாலா மனைவி அன்று மாலை மீண்டும் பிரசவ வலியால் துடித்துள்ளார். அதனால், அவர் தனது மனைவியைக் கூட்டிக் கொண்டு மீண்டும் அந்த சுகாதார மையத்திற்கு விரைந்துள்ளார். அப்போதும் அவரது மனைவி அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Woman in labour turned away from Madhya Pradesh hospital, husband carries her on handcart, newborn dies

அன்றைய நாள் இரவு, கிருஷ்ணா குவாலா மனைவிக்கு மீண்டும் பிரசவ வலி அதிகரித்த நிலையில், அவர் தனது மனைவியை ஒரு தள்ளு வண்டியில் வைத்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பிரசவம் நடந்ததாகவும், புதிதாகப் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் கிருஷ்ணா குவாலா. 

Advertisment
Advertisements

கிருஷ்ணா குவாலா தனது கர்ப்பிணி மனைவியை மூன்றாவது முறையாக தள்ளு வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் மார்ச் 23 மற்றும் 24 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகியது. 

இந்நிலையில், கர்ப்பிணிப் பெண் இரண்டு முறை சமூக சுகாதார மையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை இறந்தது தொடர்பாக மத்தியப் பிரதேச சுகாதார அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக துணைப்பிரிவு நீதிபதி (எஸ்.டி.எம்) சைலானா மணீஷ் ஜெயின் பேசுகையில், "பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளிடமிருந்து அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, மேலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். 

முதற்கட்ட கண்டுபிடிப்புகள் குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் கோரவில்லை அல்லது மருத்துவமனைக்கு ஒரு ஆம்புலன்ஸ் தேவை என்று தெரிவிக்கவில்லை என்பதைக் காட்டுகின்றன என்றும், அவர்களின் வீடு அந்த வசதிக்கு அருகில் இருந்தது என்றும், இது அவர்கள் உள்ளே செல்ல முடிவு செய்திருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். 

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி டாக்டர் எம்.எஸ். சாகர் பேசுகையில், இது குறித்து விசாரிக்க ஒரு மூத்த மருத்துவ அதிகாரி அனுப்பப்பட்டதாகவும், தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு நர்சிங் அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

Madhya Pradesh

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: