மத்திய பிரதேசம் மாநிலம் புந்தல்கண்ட் பகுதியில் மழை வேண்டி இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்து நூதன வழிபாட்டில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
உத்தரப் பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் இடையில் உள்ள புந்தல்கண்ட் கிராமத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் தவளைகளுக்கு திருமணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, இந்த ஆண்டும் எல்லா ஆண்டுகளைப் போலவே தவளை பொம்மைகளுக்கு திருமணம் செய்து வைத்து மத்திய பிரதேச மக்கள் விநோத வழிபாடு செய்தனர்.
இந்த விநோத வழிபாட்டில் பங்கேற்ற மத்திய பிரதேச அமைச்சர் லலிதா யாதவ், “மழை பெய்ய வேண்டும் என்று இறைவனை நாங்கள் வேண்டிக்கொண்டுள்ளோம். தவளை திருமணம் செய்து வழிபட்டால் மழை வரும், விவசாயிகள் நன்மை பெறுவார்கள்” என்று தெரிவித்தார்.
June 2018
இதற்காக குளக்கரையில் சிறிய பள்ளம் தோண்டி அதில் தண்ணீர் நிரப்பி இரண்டு தவளைகளையும் விட்டனர். பின்னர் அங்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து அதில் தவளைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் 2 தவளைகளையும் அந்த குளத்தில் ஜோடியாக விட்டனர். தவளைகள் திருமணவிழாவில் பொதுமக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.